நாடகவழக்கென்பது “நாடக வழக்கினு முலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம்” எனத் தொல்காப்பியத்துரைக்கப் பட்ட மூன்றனுள்ளு முதல்வழக்கு. அஃதாவது இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப் புனைந்தவுரையாய்த் தோன்றுவது. என அவ்வாறு புகழ்ச்சியிடத்து நீக்கப்படாவலங்காரமாயே வரு மென்பதாம். அவை வருமாறு :- மேலைமலையிற்புகுதுமாதவனைநிற்றியென மீளவருவித்துலகின்வாய் மாலைமதியத்தினுடனோடநியமிப்பனுரு மாறிவருவிப்பனிமையோ ராலையநிலத்திடுவன்வேலைவலயத்தையவ ணாகவுமமைப்பனழகார் சோலைமலையிற்குடி கொளாதியைநிகர்த்ததொரு சோதியைவிதிப்பனெளிதே. | (838) |
இதனுள், சம்பிரதமாதலி னுலகமலைவுப்பொருள்வந்தும் அலங்கார வழுவின்மையாயிற்று. இந்திரசாலமென்பது மிது. காழகிற்பொழிலுஞ்சந்தனப்பொழிலுங் கமழ்நறுஞ்சண்பகப்பொழிலுங் கோழரைக்கமுகுநாளிகேரமும்பொற் கோங்கும்வேங்கையுமலர்க்குருந்து மாழையஞ்சுளைமுட்புறக்கனிப்பலவு மாவுநாகமும்பணைமருதுந் தாழையுமகிழும்வாழையுங்கரும்புந் தனித்தனிதழைத்ததெம்மருங்கும். | (839) |
இது தண்பொருநையுண் மலையிரண்டிற்கும் பிறநிலங்கட்குமுரிய அகிலுஞ் சந்தனமுங் கோங்கும் வேங்கையுங் குருந்தும் புன்னையும் வந்திட மலைவாயும் புகழ்ச்சியிடத்துப் பொருந்தின அலங்காரமாயிற்று. காவியங்கண்ணியர்காலையின்மலர்கொய வாவியுட்குறுகலும்வதனமண்டலத்தினை மதியெனச்செழுந்தாமரைமலர்குவிதரப் புதியதண்புனல்படிந்திடப்புகுமாலையி |
|