பக்கம் எண் :

520மாறனலங்காரம்

யவரவர்கூறியவாறு கூறாது மாறுபாடாக வுரைத்தல் மலைதலேயாம். அது,

அன்றாலிலைத்துயின்றவச்சுதனையல்லாது
பொன்றாப்பொருளெப்புவியிலுள்ள--தென்றான்
றனதகத்தாயெவ்வுலகுந்தானடக்கிக்கொண்ட
புனலகத்தாய்நீந்தம்புயன்.
(836)

என வரும். இதனுள், ஆதிப்பிரமகற்பாந்தத்திற் சகலகடவுளருஞ் சகலான் மாக்களுமழியச் சகலான்மக்களையு மகிலாண்டகோடிகளையுந் திருவுதரத்தடக்கி யழிவிலாதிருந்தது ஸ்ரீ மந்நாராயணனென்று மார்க்கண்ட னுரைத்தா னெனற்பாலதனைப் புனலகத்தாய்நீந்தும் பிரமாவுரைத்தா னென்றமையான் நியாயமலைவாயிற்று. அச்சுதன்- அழிவிலாதான். அக்காலத்துப் புனலகத்தாய் நீந்திக் கண்டது மார்க்கண்டன். ஒழிந்தனவு மிவ்வாறே யொட்டிக்கொள்க.

(25)

325. அறம்பகர்மனுமுதலாயினவாகமம்.

(எ-ன்) ஆகமமாமாறுணர் - ற்று.

(இ-ள்) அறத்தினதுமார்க்கத்தைக்கூறாநின்ற மனுமுதலாய பதினெண் வகை யறநூலுமே யாகமமா மென்றவாறு.

அவற்றொடு மலைவாவது :  இன்னா ரின்னதுசெய்த லற மென்று விதிக்கப்பட்ட விதியிற் பிறழவருவது. அது,

ஓட்டினொடும்பொன்னையொருநிலையாயுட்கோடல்
வீட்டினதின்பத்தைமிகவிரும்ப--லேட்டிருண்மென்
கூந்தலாரின்பமதுட்கொள்ளாமையில்லறத்திற்
றோய்ந்துளார்க்குண்டாஞ்சுகம்.
(837)

எனவரும். இதனுள், துறவறம்பூண்டார்தொழிலை யில்லறம் புரிந்தாரோடு புணர்த்தமையா னாகமமலைவாயிற்று.

(26)

326. நாவலர்நாடகவழக்கினுணயந்து
மூவிருமலைவுமொழிவதற்குரிய.

(எ-ன்) எய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) மேற்கூறிய வாறுவகைவழுவு நாடகவழக்கத்தாற் கூறுங்கால் நாவலர்க்குரியவாகக் கொள்வதா மென்றவாறு.