இதனுள், ஐயாண்டிற் றண்டியம்பிடித்து ஏழாண்டியற்றிப் பன்னீராண்டினி லவையரங்கேறினாளொன்னாது மைந்தர்க் கிந்திரியகலின முறுவதென்றுவிசாரிக்கப்பட்ட பதினாறாமாண்டிற் றண்டியம்பிடித்து ஆடலும் பாடலு முற்றக்கல்லா வாசானுட னவை யோரயணத்தின் முற்றக்கற்றனளாய்க் கடியரங்கேறின ளெனவுங் கூறியதன்மேல் ஒற்றை யிற்செய்த கைத்தொழி லிரட்டையிற்புகாமலு மிரட்டையிற்செய்த கைத்தொழி லொற்றையிற்புகாமலுங் கைத்தொழில்காட்டாது மலையக் காட்டினா ளெனவும், இசையை மெய்யினு மிபலைக் கையினுந் தாளத்தைப் பாதத்தினுங் காட்டாது மயங்க நடித்தனளெனவும், அவடானே பின்னொருநாள் நாதமும் நூல்சொன்னபடிநடத்தாது பிறழநடத்தின ளெனவுங் கூறினமையானுங் கலைமலைவாயிற்று. கலையென்பது வித்தை. இசையைப் பிறழநடத்தினாளென்பது நின்றநரம்பிற் கைந்தாவது கிளையாதலா னதனைப் பகையென்றும், ஆறாவது பகையாதலா னதனைக் கிளையென்றும், நான்காவது நட்பாதலா னதனை யிணையென்றும் இரண்டாவதனைத் தொடுத்தல். என்னை? “ஐந்தா நரம்பிற் பகைவிரவா தாறாகி, வந்த கிளைகொள்ள நான்காகி - முந்தை, யிணைகொண்ட யாழெழுவு மேந்திழைதன் னாவித், துணைவன் புகழே தொடுத்து” எனத் தொண்டி எச்சவியலிற் கூறியவதனா லறிக. அஃதேல் இந்நூலுட்கூறிய தொனிக்குத் தெண்டிகூறிய வுதாரணமே யுதாரணமாகக்காட்டியவா றென்னையெனின் இந்நூற் கது முதனூலாயதாற் காட்டியதென வுணர்க. அவடானே பின்னொருநா ளென்பது சொல்லெச்சம். அஃதன்றித் தோரியமடந்தை யவளாடியவவைக்களத் தங்ஙனம் பாடினா ளெனினு மாம். தோரிய மடந்தையாவாள் ஆடிச்செலவைத்தவளா யங்ஙன மாடினவள்காலுக்குப் பாடினவள். (24) 324. | அளவையினாயபல்பொருட்கமைவினைத்திற முளமுறமதித்துரைப்பதுவேநியாயம். |
(எ-ன்) நியாயமாமாறுணர் - ற்று. (இ-ள்) ஒரோகாரணங்களா லுலகத்துண்டாயபொருள்கட் கமைக்கப் பட்ட வினையினது கூறுபாட்டைக் காட்சி முதலாய நால்வகையளவைகளாற் குறித்துக் கேட்டோருள்ளத்துறும்படி யுரைப்பது நியாயமா மென்றவாறு. அவை யறுவகைப்பட்ட சமயங்களோடுங்கூடிய வுலகத்துப்பொருள் களினது தோற்றமு மழிவு மின்னவகையவென்று கூறுதல். அவற்றை |