பக்கம் எண் :

518மாறனலங்காரம்

நின்னிற்பிரியலன்பிரியினாற்றலனெனு
மன்னர்பொய்ம்மொழியினுமடங்கலுமடங்கலுஞ்
சுடுஞ்சுடுந்தொடர்ந்துமன்னுயிரை
யடுங்கொடுமையவெனுமவரறிவிலரே.
(834)

என வரும். இதனுள். வேனிற்காலத்திற்குரியகுயிலைக் கார்காலத்துடன் புணர்த்தும், பகன்மலர்தாமரையை இரவுமலர்ந்ததாகப் புணர்த்தும், பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுமாகிய விரண்டுகாலமு மலைவாயிற்று.

(23)

323. பொருளுமின்பமும்புணர்பொருட்டாகியநூ
லருளுமெண்ணான்கிரட்டியகலையதுவே.

(எ-ன்) பொதுவகையாற் கலைக ளின்னதுக்குங்கருவியாய்த் தோன்றுமென்பதூஉ மவற்றது தொகையு முணர்-ற்று.

(இ-ள்) கலையென்றுசொல்லப்பட்டவது பொருளு மின்பமு மெய்துதற்கே துவாய வேதமுதலியநூல்களுட் கூறப்பட்ட வறுபத்து நாலா மென்றவாறு.

ஏகார மீற்றசை. அவற்றொடுமலைதலாவது அவ்வந்நூல்களுட் கூறியபடிகூறாது பிறழக்கூறுதல்.

நாணமில்செய்கைநாடகக்கணிகையர்
மாண்மரபினிலொருவனிதைதன்மைந்தர்க்
குற்றவெண்ணிரண்டுடனோங்கியவுருவம்
பெற்றவந்நிலைத்தண்டியம்பிடித்தனளா
யாடலும்பாடலுமமைவிலன்கொளுத்த
நீடலிலயணமொன்றினினிரப்பினளாய்ப்
படிபுரந்தருளும்பார்த்திபன்முன்னர்க்
கடியரங்கேற்றியகாலையிற்பிண்டியிற்
யிணையலுங்களையாள்பிணையலிற்பிண்டியு
மணைதரல்களையாதாடலுந்தாள
மெய்யிற்பயிலவுமேதகவுடையிசை
கையிற்பயிலவுங்காலியல்பயிலவு
நடித்தனணடத்துடனாதமுமுன்னூல்
வடித்திடுபான்மையின்மலைத்திடநடத்தின
ளாடல்சான்றோரவருடன்
பாடல்சான்றோர்பயிலவைக்களத்தே.
(835)