பக்கம் எண் :

(எச்சவியலுரை)517

எனவும் வரும். இவற்றுள், இமயத்திற்குரியன பொதியிலகத்துளவாகவும் பொதியிலகத்துளவானவை யிமயத்துளவாகவும்புணர்த்து மலையிட மலைவாயிற்று. தண்பொருநைக்குரியன கங்கையொடுபுணர்த்துங் கங்கைக்குரியன தண்பொருநையொடுபுணர்த்து மாற்றிடமலைவாயிற்று. மாளுவ மாரியமுதலாயினவற்றிற்குரிய கலிங்கத்தொடுபுணர்த்துங் கலிங்கத்திற்குரிய மாளுவ மாரியமுதலியவற்றொடு புணர்த்தும் நாட்டிட மலைவாயிற்று.  

(22)

322. சிறுபொழுதொடுபெரும்பொழுதெனக்கால
மறுவகைத்தாமெனவறைந்தனர்புலவர்

(எ-ன்) காலமாமாறு மதன்பகுதியு முணர்-ற்று.

(இ-ள்) காலம், சிறுபொழுதுடன் பெரும்பொழுதென இரண்டு கூறா யொரோவொன்றறுவகைத்தா மென்றுஆசிரியர்கூறினா ரென்றவாறு.

அவற்றுள், சிறுபொழுது :  விடியல் உச்சி எற்பாடு மாலை யாமம் வைகறை என ஆறு. பெரும்பொழுது :  கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என ஆறுமாம். அவற்றொடு மலைதலாவது :  ஒன்றற்குரிய பூவும் புள்ளும் பொழுதும் தொழிலும் வேறொன்றிற்குரியவாகப் புணர்த்துரைப்பது.

உம்மையினிரந்தோர்க்கொன்றீயாதோ
ரிம்மையின்வறுமையென்பவற்றினுக்கிடமென
விரப்பவராயிலமெனவிசைத்ததற்கெதிர்
புரப்பவரிலமெனப்புகலும்வெவ்வுரையினு
நிரப்பெவனெனநிகழ்த்துதனிமித்தமதாய்க்
கரப்புரையிஃதெனக்கலுழ்ந்தகண்ணீரினைத்
தடுப்பவர்போற்றுயிலையுந்தடுத்திருகையி
னெடுத்தணைத்தினையலென்றெனையும்வற்புறுத்திப்
போர்வேலவர்தாம்போமுனங்குறித்த
கார்காலத்தினிற்கார்வருமாலையிற்
குயிற்குலங்காமாகூகூவெனுநிலை
வெயிற்குலமெனவிருள்வெருளவெண்ணிலவெழப்
புரவலர்முகம்போற்பொற்புமிக்கதுவா
யிரவலர்தாமரையேமநன்மலரே