தேவர்கோனாகிய விந்திரன் களித் தாண்டிருக்குந் தேவலோகத்தையெட்டிப் பார்த்துத் தனக்குப் பூலோகமொன்றுமாண்டிருப்பதேபோதுமென மீண்டுவந்தவனாகு மிந்த வேந்தர்க்குவேந்த னென்று மாறுபடக்கூறினமையா னுலகமலைவாயிற்று. (21) 321. | இடமதுமலைநாடியாறெனமூன்றே. |
(எ-ன்) வைத்தமுறையானே இடமென்பதனை விரித்துணர்- ற்று. (இ-ள்) இடமென வொன்றாய்நின்றவது மலையும் நாடும் யாறுமென மூன்றா மென்றவாறு. மலையென்பன : பொதியமு மிமயமு முதலாயின. நாடென்பன : பதினெண்பாடைக்குமுரிய நிலங்கள். யாறென்பன : கங்கையும் பொருநையுங் காவிரியு முதலாயின. இவற்றுள் ஒன்றினுளுரியவாகச்சொன்ன பொருள் பிறிதொன்றனுளுரியவாகச் சொல்லுதல் வழுவாம். அவை, காரகிலும்பொன்னுங்கவின்செய்மலயத்தினிற்பெண் ணாரமுதின்மெல்லடிகட்கையனே--பார்பரலாய்ச் செந்தழல்பாரித்தகடஞ்செப்பினசும்பூரிமயச் சந்தனச்சோலைத்தடமாந்தான். | (832) |
எனவும், பருவமாமழையுகுபஃறுளிதிரண்டுநீ ரருவிபாடிமிழ்வளனமர்சிலம்பாநின் னறைகழல்பணிந்தெழுகலிங்கத்தரசர் திறைதருகலினத்திரள்வாம்பரிகளு மாளுவராரியர்மராட்டர்சோனகரெமை யாளுகவெனத்தாழ்ந்தருள்கடாக்களிற்றுட னறக்கழிவினராயருஞ்சமத்தெதிர்ந்து புறக்கொடைபுரிந்தோர்புரந்தநன்னகர்களுங் கங்கையுள்வலம்புரிகான்றவெண்டரளமுந் துங்கவண்பொருநைத்துறையுண்மாமணிகளு மெண்ணிலாதளிப்பினுமிடைவிலையலவாற் பெண்ணியல்பெருக்கியபேரமுதாமெனத் திருமகளாமெனச்சிறந்தவள் வருமுலைக்கெவனீவிலைவழங்குவதே. | (833) |
|