(எ-ன்) இதுவு மொருவகை வழுவாமா றுணர் - ற்று. (இ-ள்) உலகமலைவு மிடமலைவுங் காலமலைவுங் கலைமலைவும் நியாயமலைவு மாகமமலைவு மென்றுகூறப்படுவனவா மொருவகைமலைவு மாறுளவா மென்றவாறு. ஏகார மீற்றசை. மலைவென்பதனை யிறுதிவிளக்காக வெங்கு மொட்டுக. மலைவென்பது மாறுபடுதல். எனவே யவையு மொரு வகைவழுவாயிற்று. அஃதேல் ஒழிந்த வழுவுணர்த்துமாறெடுத்த தொகைச்சூத்திரத்து ளொருவகைப்படப் பதினைந்தெனக்கூறாது இரு வகைத்தாகப் பிரித்துக்கூறியவா றென்னையோவெனின் முன்னரொன்பதுங் குற்றமாதல் பெரும்பான்மையாய்ச் சிறுபான்மை யொரோவிடத்துக் குணமாதலுமுடையவென்றுரைக்கப்படும் ; பின்னராறும் ஒருதலையாகவே குற்றமாய்ப் பொருந்துமிடத்துப் புனைந்துரைவகையா னன்புலவராற் சிறுபான்மை மொழியப்படுமென்ப தறிவித்தற்குக்கூறியவா றெனவுணர்க. (20) 320. | ஒழுக்கநடையேயுலகமதாகும். |
(எ-ன்) வைத்தமுறையானே உலகமலைவாமா றுணர்-ற்று. (இ-ள்) அவ்வாறனுள், பெரியோரா லெடுத்துவழங்கு மொழுக்க நடையே யுலகமென்றுகூறப்படுவதா மென்றவாறு. எனவே உலகமென்பது மக்கண்மேலு நிலத்தின்மேலு மொழுக்கத் தின்மேலு நிற்கும் பலபொருளொருசொல்லாதலா னிவ்விடத் தொழுக்கத்தையேகோடற் குலகென் றெடுக்கப்பட்டது. அவ்வொழுக்க மெல்லாரும் அறிவுறக்கிடந்தமையா னின்னதென் றெடுத்துரைக்கவேண்டுவ தில்லை. அது மலைதலென்பது உலகத்தொழுகலாற்றோடு மாறுபட்ட வொழுக்கநிகழ்வதாகக் கூறுதல். பூமிநடுநின்றுபுணரியேழுந்தாவி நேமிவரைதனினேர்நின்றமரர்--கோமகிழ்வுற் றாண்டதுறக்கமதைப்பார்த்தவனிபோதுமென மீண்டவனிவ்வேந்தர்க்குவேந்து. | (831) |
என வரும். இதனுள் ஒருதீவினுள்வேந்த னெழுதீவையு மெழுகடலையு மேழ்பூமியையுங் கடக்கப் பாய்ந்து, சக்கரவாளகிரியி னிமிர்ந்துநின்று, |