பக்கம் எண் :

514மாறனலங்காரம்

இஃது ஆசிரிய முதல்வந்து வெண்பாவாய் முடிந்தது. அவ்வாறு முடிதற் கோத்திலாமையால் வழுவாயிற்று. பகுதி - இயற்கை. துறை - இடமணித்துக்கூறி வற்புறுத்தல்.

(18)

318. தவமுறுபவரவர்போலுணர்சாற்றலு
ணவமுறப்புனைசெயுணடைநவையிலவே.

(எ-ன்) மேற்சொல்லப்பட்ட செய்யுள்வழுச் சிறுபான்மை யொரோவிடங்களுள் வருவன வுளவாமென்று வழுவமைப்புணர்-ற்று.

(இ-ள்) தவசரிதையெய்துமிருடிகளும் அவர்போல்வாருமாகிய முற்றவுணர்ந்த மூதறிவுடைப் புலவோரா னவமாகப்பாடப்படுவனவாஞ் செய்யுணடை யாசிரியரால் நீக்கப்படுங் குற்றமில்லையா மென்றவாறு.

நாராயணனேநமவென்றுரைப்பவர்பால்
வாராதொருநாளும்வல்வினைதான்
சாரானொருதலையாய்த்தண்டதான்சாராவாம்
பேராதமாயப்பிறப்பு.
(830)

இது சவலைவெண்பாட்டு ; என்னை? இதனுள் முதலே காசு நாள் மலர் பிறப்பு என்னும் வாய்பாட்டாலிறாது மூவசைச்சீராயிற்ற குறள்வெண்பாவா யதன்பின்னரும் பிறப்பென்னும்வாய்பாட்டாலிற்ற குறள்வெண்பாவாய்த் தனிச்சொலின்றிமுடிந்தமையா லென வறிக. இதற்கு முன்னோர்கூறியசூத்திரம் யாதோவெனின் “நனியிரு குறளாய் நான்கடி யுடைத்தாய்த், தனிவர லில்லது சவலைவெண் பாட்டே” என்பதென வுணர்க. அன்றியும், “அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய், நட்டாலு நண்பல்லார் நண்பல்லர், கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு, சுட்டாலும் வெண்மை தரும்” என்னுஞ் செய்யுளானு முணர்க.

எனவே மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்ட வொன்பதும் பொதுவகையான் வழுவெனக்கூறியவற்றைத் தனித் தனி விதிச்சூத்திரத்தா னிவ்வாறுவரின் வழுவென விதித்துச் சிறப்புவிதியா னிவ்வாறுவரின் வழுவமைதியா மென்றவாறாயிற்று.

(19)

319. உலகிடங்காலங்கலையேநியாய
மாகமமலைவென்றாறொருவகையுள.