பக்கம் எண் :

(எச்சவியலுரை)513

இதனுள் வாள்போன்றகண்ணிணை வாட்கண்ணிணையென “லள வேற் றுமையிற் றடவு மல்வழி, யவற்றோ டுறழ்வும் வலிவரி னாம்” என்னுஞ் சூத்திரத்தான், ளகாரம் டகாரமாக மெய்பிறிதாகமுடியற்பால வழி வாள்கண்ணிணையென வியல்பாய்முடிந்தமையாற் சந்திவழுவாயிற்று.

(16)

316. ஐயெனுருபுதொகினஃதியல்பாம்.

(எ-ன்) அத்திரிபு திரியாது இயல்பாமிட முணர்-ற்று.

(இ-ள்) இரண்டாம் வேற்றுமைதொக்கபுணர்ச்சியில் வல்லெழுத்து முதன்மொழிவந்துழித் திரியா தியல்பாய்முடியவும்பெறு மென்றவாறு.

அஞ்சொன்மடவாயரங்கத்தமுதமெனு
மஞ்சனையசெவ்விமழைவண்ணன்--கஞ்சமலர்த்
தாள்கண்டார்மாரன்றனக்கிலக்கானாற்றுளபத்
தோள்கண்டாரென்படார்சொல்.
(828)

இதனுள், தாள்கண்டார் தோள்கண்டாரென “இயற்கை மருங்கி னியற்கை தோன்றலு, மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்” என்பதனா லியல்பாய்முடிந்தன. திணை - பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை....

(17)

317. பழுதறப்பகர்ந்தபாட்டினதியல்பு
வழுவுதல்செய்யுள்வழுவெனமொழிப.

(எ-ன்) செய்யுள்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அகத்தியன்முதலோர் செய்யுளியலுட் குற்றமறப்பகர்ந்த செய்யுளிலக்கணத்தோடுகூடாது வழுவும்பகுதியாய்வருதல் செய்யுள் வழுவென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

முல்லைவெண்ணகைமொய்குழனுமர்வாழ்
மல்லன்மால்வரைக்கெமர்வரைநல்வினையாற்
கூடலருண்மங்கையரைக்கூடிப்பிரிந்துவருந்
தாடவர்க்குவேள்போன்றணித்து.
(829)