காலிருக்கக்கையிருக்கக்கண்ணிருக்கச்சென்னியதன் மேலிருக்கநாநடுவேவீற்றிருக்க--நாலிருக்கும் பொய்யாதிருக்கப்புகழ்மாறனைவலஞ்செய் துய்யாதுமஞ்சலியாதும். | (11) | | பூவிற்சிறந்தவவன்பொன்னடியைக்கண்டுமலர் தூவிவணங்கித்துதியாத--பாவிகளோ டொன்றாகியவுளமேபோனவைபோட்டூதியமா மின்றாகிலுமுற்றிறைஞ்சு. | (12) |
இவையிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாந்தியகுளகம். இதனுள் மாறனையென்பது மால்தனை எனவும் பொருந்தும். இவை யாறிற்கும் ஒழிந்த அகல முரையிற் கொள்க. திணையுந் துறையு மிதுவு மது. அடித்தகைத்தலம்பிடித்துவன்கனகனாருயிரைக் குடித்தகோளரியாயகொற்றவனுமாண்குறளாய் நடித்துமூவுலகன்றளந்தவனுமைந்நாகந் துடித்துமூலமென்றழைத்ததற்குதவியசுகத்தோன். | (13) | | அம்பிகாபதியிரப்பொழித்தவனுமாதரவா லும்பராரமுதருந்தவைத்தவனுமும்பருளார் தம்பமாந்தசரதன்றிருமகனெனத்தழைத்தே கம்பவாரிதியடைத்தருளயோத்திகாவலனும். | (14) |
இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டு முற்றிய யுகளமத்திய குளகம. திணை - பாடாண் ; துறை - கடவுள்வாழ்த்து. அரியுமயனுமரனுமெனமூன்றாய்த் தெரியுமவருட்டெளிதற்--குரியபொரு ளந்தாமத்தானென்றுணர்த்தியடியவர்தஞ் சிந்தாகுலந்தவிர்த்ததே, | (15) |
முந்தமதுரகவிக்களித்தமூதுரைசா லந்தமலரடியையாதிரைநாள்--வந்த |
|