செய்யுளகத்து முதல் இடை கடை யென்னு மூன்றிடத்தும் நூல் சொன்னவிதியாக நிலைபெறுமென்றவாறு. வினையென்ற விதப்பால் வினையின்வேறல்லவாம் வினைக்குறிப்பும், பெயரென்ற விதப்பாற் பெயர்ப்பெயரேயன்றி வினைப்பெயருங் கொள்ளுமென வுணர்க. வினைமுதலிய நான்கோடுந் தானமூன்றோடு முற்றவுதாரண மீண்டுரைப்பிற் பெருகும். அவற்றுட் சிலவுதாரணங் காட்டுதும் :- நினைமருவொன்றில்லாஞானாதிகளைப் புனைவகுளத்தாமப்புயனை--வினையினையே வென்றானைக்காரிதரும்வித்தகனைப்பாவலன்பின் சென்றானேநாதனெனத்தேர்ந்து, | (7) | | வேதமதனைவிளங்குதமிழ்ப்பாப்படுத்திப் போதந்தழைந்துபுகழ்புண்ணியனை--நாதமுனி போற்றும்புனிதனையந்தாமம்புகமனனே தேற்றம்பயின்றேதினம். | (8) |
இவையிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாதிகுளகம். உகளக குளகமென்பது இரண்டுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது. குன்றமதனைக்குடைகொண்டநீலமணிக் குன்றமதனைக்குணக்கடலைக்--குன்றமதே மத்தாகக்கொண்டமிர்தம்வானோர்க்களித்ததரு மத்தானைத்தேவாய்மதித்து, | (9) |
வாழ்த்துபரசமயவாதியர்தம்வாய்மதத்தைச் சாய்த்ததமிழ்மறைப்பாத்தந்தானைக்--கீர்த்திபுனை பாவேசர்போற்றும்பராங்குசனைமுத்திபெற நாவேமனத்தானயந்து. | (10) |
இவையிரண்டும் வினைகொண்டுமுற்றின யுகளகமத்திய குளகம். வாழ்த்து என்பது ஏவல்வினை. இவை நான்கும் திணை - பாடாண் ; துறை - ஓம்படை. |