பக்கம் எண் :

பொதுவியலுரை61

பாடு. நுண்டுளி - அசும்பு. கார் - மழை. வரவு - வாராநின்றது. அயரேல் - வருந்துவதொழி என்றவாறு. பகுதி - வரைபொருட்பிரிதல். துறை - பருவங்காட்டிவற்புறுத்தல்.

நிறையழிகாமக்கடலைநீந்திச்சலாபத்
துறைமுகமுத்தங்கொளவேசூழ்வார்க்--கிறைவளையா
யாய்ந்தபுணையென்பவருண்மாறன்வண்குருகூர்
வாய்ந்தபனைமாமடல்.
(6)

(இ-ள்) அருண்மாறன் வண்குருகூரிறைவளையாய் ! ஆடவர் நிறையாகிய கரையை யழிக்கப்பட்ட காமமாகிய புணரியைக் கடந்து மகளிரிடத்தின்பத்துறையைத் தரும் முகத்தில் அதரபானத்தையுட்கொள வழி யேதென்று விசாரிப்பவர்க்கு வாய்ந்த பனைமாமடலே ஆராய்ந்தறிந்த புணையென்றுகூறுவர் பெரியோரென்றவாறு.

இதுவும், ஆடவர்களென்னும் பெயர்ச்சொல்லும், எனக்கு மதுவே குறிப்பென்னுங் குறிப்பும் எஞ்சிநின்று முற்றியதால் இருவகையெச்சமும் மாட்டுறுப்புங்கூடித் தனிநின்று முற்றின முத்தகம். சலாபத்துறை முகமுத்தங்கொள என்பது சிலேடை. இது, பாங்கியிற்கூட்டத்துச் சேட்படுக்கப்பட்டானான தலைமக னாண்டுறந்துரைத்தல். பகுதி - மடல். துறை - உலகின்மேல்வைத்துரைத்தல். முத்தகமென்பது காரணப் பெயர். முத்தகம் முற்றும். (3)

இனிக் குளகம் வருமாறு :-

68. குளகம்பலபாட்டொருவினைபேர்கொண்டு
வளர்முலையாய்மூன்றிடத்துமன்னு--மளவை
யுகளகஞ்சாந்தானிகங்காபாலிகத்தோடைந்தின்
மிகல்வகைத்தாநூல்சொல்விதி.

(எ-ன்) முறையே குளகச்செய்யுளின்கூறுபாடுணர்..... ற்று.

(இ-ள்) வளராநின்ற முலையினையுடையாய் ! குளகச் செய்யுளென்பது, பலபாட் டொருவினையேயாதல் ஒருபெயரேயாதல்கொண்டு, எண்ணினதளவு உகளகம், சாந்தானிகம், காபாலிகம் என்னு மூன்று திறத்தினோடும், ஐந்தாயும் அவ்வைந்தினுமிகுங் கூறுபாடுடைத்தாயும்