மதுமலர்ச்சோலையுண்மடவரல் புதுவதுபுதுவதாய்ப்புரிந்தருணலனே. | (4) |
என்பது பாங்கியிற்கூட்டத் திறுதிக்கட் டலைமகன் கூறியது. இதனுள், கருப்பம்வந்தடியிடக்கண்டகண்மலரால் விருப்பமுற்றது என்பது இயற்கையிற்கூடிய வின்பவிருப்பத்தை. அதனினு மேம்படும் புதல்வர்பீடுடைமுகமலர் சிறந்தவர்காண்டொறுஞ் செறிபேரு வகை என்பது இடந்தலைப்பாட்டிற்கூடிய வின்பமகிழ்ச்சியை. ஆங்கவற்றினுமிகு மழலை யோங்கியசெவிப்புலத் துறவருமுவகை யென்பது பாங்கற்கூட்டத்திறுதிக்கட் கூடிய வின்பமகிழ்ச்சியை. உவகையிற் கழிந்தபேருவகையதாகுங் கல்வியுங் கவியுங் கவின்பெறச் செலச்சொலு மெல்லையிற்றாதையின்புறலும்பொருவரும் என்பது பாங்கியிற்கூட்டத்துக்கூடிய புணர்ச்சியை. பொருவருமென்பதனை நான்கினுங் கூட்டுக. குணம்-அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு. திரு-செல்வம். அளவளாய் - கலந்து. திறம்பா - அழியா. அவமதிப்பு - கற்கப்படுநூல்களைக் கற்கநினையாமை - இகழ்தல். இன்றி-இல்லாமை. செலச்சொலல் - கூறும்பொருள்களறிதற்கரியவாயினுங் கேட்போர்க் கெளியவாய் மனத்துட்கொளக் கூறல். கவின்பெற - அழகு பெற. ஒழிந்த அகல முரையிற்கொள்க. இது மாட்டுறுப்பு மெச்சமு மின்றிவந்த முத்தகச்செய்யுள். என்னை? “மாட்டுமெச்சமுநாட்ட லின்றி, யுடனிலைமொழியினுந்தொடர்நிலைபெறுமே” என்றாராகலின். பகுதி - பகற்குறி. துறை - இதுவும் புணர்ச்சிமகிழ்தல். தண்டளவுங்கொன்றையும்பைந்தார்தழைப்பவாய்மயிலின் கண்டழைப்பவண்டுகளிதழைப்ப--நுண்டுளிசோர் கார்வரவிதென்றயரேல்கண்ணன்குறுங்குடியார் தேர்வரவிதென்றணங்கேதேர். | (5) |
இதுவும் மாட்டுறுப்பு மெச்சமுமின்றிவந்து தனிநின்றுமுடிந்த முத்தகச்செய்யுள். தார் - பூ. ஆய்மயில் - ஆடாநின்ற மயில். வரவு என்பது தொழிற்பெயர்போலநின்று நிகழ்காலங்காட்டுவதோர்வாய்
|