தெவிட்டாவின்பம்போலு மொன்றெனலாம், பொற்றாமரையோடையினிடத்துக் கராமொடுபொருது நொந்தழைத்த கடாத்தொடுகூடிய மலைபோன்றயானைக் கதனுயிர்பிழைப்பான் சென்றுதவிய கண்ணனது வடக்கின்கண் வேங்கடவெற்பினிடத்து மடவரல் தோன்றிநின்றருளிய பேரின்ப மென்றவாறு. மனனே என்பது தோன்றாவெழுவாய். இதனுள், பொழிப்புரை குரவனிற் றெளிந்தோர்க் கந்நூல்களீந்த வின்பத்தினும் என்பது முயற்சியின்றி யியற்கையிற் றெய்வத்திற்கூடிய இன்பமதாம். விரித்துரை தாந் தம் முயற்சியாலுணர்வுழி முன்னுமின்பத்தினு மென்பது சிறிது முயற்சியா னிடந்தலைப்பாட்டினெய்திய வின்பத்தினு மென்பதாம். நுட்பமு மெச்சமு மொருபுடைமாணாக்கரி னுணர்ந்தவிடத் தெய்திய தெவிட்டாவின்பமொன்றெனலா மென்பது பாங்கனாற்கூடிய கூட்டத் தெய்திய வின்பமென்பதாம். இவை குறிப்புவமை. குலனுந்தொன்மையுங்குணனுந்திருவு நலனும்பருவமுமுருவமுநயந்தோ ரறம்புரிகொள்கையோடளவளாய்வாழ்நாட் டிறம்பாக்கற்புடைச்சேயிழைவயிற்றிற் கருப்பம்வந்தடியிடக்கண்டகண்மலரால் விருப்பமுற்றதனினுமேம்படுநிலத்துறப் பிறந்தநன்புதல்வர்பீடுடைமுகமலர் சிறந்தவர்காண்டொறுஞ்செறிபேருவகை யாங்கவற்றினுமிகுமரும்புமென்மழலை யோங்கியசெவிப்புலத்துறவருமுவகை யுவகையிற்கழிந்தபேருவகையதாகு மவமதிப்பின்றியேழாண்டமைவெய்தலும் பொற்புடைக்குரவர்தம்பொன்னடிவணங்குபு கற்பனயாவையுங்கசடறக்கற்றபின் கல்வியுங்கவியுங்கவின்பெறச்செலச்சொலு மெல்லையிற்றாதையின்புறலும்பொருவரும் பூதலம்புகழப்பொலிந்துநின்றருளிய சீதரன்குருகாபுரேசன்சிலம்பின் |
|