றமிழாகிய திருவாய்மொழிபாடிய காரிமாறப்பிரானை வாழ்த்து முண்மைத்தொண்ட ரிவ்வுலகத்து மகளிரிடத்தெய்து மின்பத்தின்மேல் வைத்த வாசையைவிட்டுப் பரமபதத்தின்பமே தெவிட்டாதவின்பமென முன்னமுணர்த்திய முதுமொழி யிதுபொழுது விசாரிக்கிற் சந்தயமாவ தொன் றென்றவாறு. மனனே என்பது தோன்றாவெழுவாய். நின்றவென்பது முதலாய சொல்லெச்சங்களையு மாங்காங்கு வருவித்துக்கொள்க. மன்-ஆக்கம். ஓ- அசை. பகுதி - இடந்தலை. துறை - இதுவும் புணர்ச்சிமகிழ்தல். முதல்வனிற்பெறுநூன்முதற்றாயெனலாய்ப் புதல்வனிற்பிறந்தவழிநூற்பொழிப்புரை செலச்சொலுங்குரவனிற்றெளிந்தோர்தமக்கவ் விலக்கணவிலக்கியமீந்தவின்பத்தினு நயப்படவிரித்துரைநடைதாந்தமது முயற்சியினுணர்வுழிமுன்னுமின்பத்தினு முணராநுட்பமுமெச்சமுமொருபுடைப் புணர்மாணாக்கரிற்புலப்படுமவர்பா லெய்தியதெவிட்டாவின்பமொன்றெனலாம் பொய்கையுட்கராமொடுபொருதுநைந்தழைத்த கடமலைக்குதவியகண்ணன் வடமலைமடவரல்வாய்ந்தருணலனே. | (3) |
என்பது பாங்கற்கூட்டத்திறுதிக்கட் டலைமகன் புணர்ச்சிமகிழ்தல். (இ-ள்) மனனே ! முதல்வனா லமைத்தருளப்பட்ட முந்து நூல் நற்றாயாக அதற் கொரு புதல்வனைப்போலப் புலவராலமைக்கப்பட்டுண்டான வழிநூலின்பொழிப்புரை முதலே கேட்போ ருணர்வுட்கொள்ளப் புகலுங் குரவனாற் றெளியப்பட்டோர்க் கவ் விலக்கண விலக்கியங்கள் புரந்தவின்பத்தினும் நன்குமதிப்பதாக வந்நூல்கட் காசிரியர் விரித்துரைப்பதாய வுரையினது ஒழுக்கத்தை யவ்வுரைகோளாளர் தமதறிவுடன் முயற்சியாலுணர்ந்தவிடத்துண்டான இன்பத்தினும் நூல்களிடத் துணரப்படாத வரும்பதநுட்பமும் எச்சமும் தம்மொடு கற்ற வொருபுடைமாணாக்கராலாராய்ந் தறிவிற்புலப்பட்ட வவர்பா லெய்தி |