பக்கம் எண் :

பொதுவியலுரை57

விரித்துரையெழுதாததற்குஞ் சொற்றொறும் பொரு ளுய்த்துணர்ந்து கொள்க. பகுதி - இயற்கை. துறை - புணர்ச்சிமகிழ்தல்.

முயற்சியொன்றின்றாய்நெருநன்முழுநல
னியற்றியதெய்வதமிறவாதிருப்பதொன்
றென்றுணர்ந்துழப்புறினின்றுமாங்கெதிர்தன்
மன்றவென்றுறுதலின்மடந்தையர்குழாமொரீஇ
மடந்தபமாணிழைவணரிணரைம்பா
லிடந்தலைப்பாட்டினெய்தின்பநன்பனுவலைத்
தேரின்பத்தையுஞ்சிறிது நில்லாதே
பேரின்பமதாய்ப்பெருகவுமன்னோ
சிற்றின்பமெனத்தீர்ந்தனராகிச்
சொற்றமிழ்மாறனைத்துதிக்குமெய்த்தொண்டர்
பற்றறுத்துணர்த்தியபாசுர
முற்றிடிலாசங்கையதாமொன்றே.
(2)

என்பது இடந்தலைப்பாட்டின் கூட்டத்திறுதிக்கட்ட டலைமகன் சொல்லியது.

(இ-ள்) மனனே ! நம்மிடத்து முயற்சி சிறிது மில்லையாகவும் நெருநற்று நமக்குப் பெருத்தவின்பத்தை யுண்டாக்கித்தந்த தெய்வமான தென்று மிறவாதிருப்பதொன்றாமென்றறிந் தினி நாஞ் சிறிது முயற்சி யுறி னின்று மத்திருவுரு முதுனாட்கண்டவிடத் தெதிர்தல் சந்தய மில்லையென் றியா முறுதலோடு மிகுளையர்குழாத்தைவிட்டுநீங்கி நம்மிடத்து வைத்த வேட்கையாற் றன்னிடத்தொன்றிய மடமையுந் தன்னை விட்டுநீங்க மாட்சிமைப்பட்ட அணிகளோடுங் கடைகுழன்று பூங்கொத்துச்செருகிய குழலினையுடையா ணம்வரவுபார்த்துநின்ற விடத்துத் தலைப்படுதலாலெய்திய வின்பமானது, நன்பனுவல்களை யாராய்ந்து நமதுண்ணின்றவின்பத்தைச் சிறிது நிலைபெறாதே பெயர்க்கப்பட்டதா யவ்வின்பநின்றவிடங்கொண் டாராவின்பமாகப் பெருகாநிற்ப இதனைச் சிறியதாகிய வின்பமென விட்டுநீங்கினராகிச் செஞ்சொற்