இதனுள் ; நாடினனென்பது ‘வினையெஞ்சுகிளவியும்வேறுபல்குறிய’ என்பதனால் வினையெச்சத் தனித்தன்மைத் தெரிநிலைமுற்று. சார்வுழி என்பது கொள்வுழி, செல்வுழி என்பனபோல ஒற்றீற்று வகர வுடம்படு மெய் வந்தது. உயவல் - உசாவல் ; “யானொன்றுயவுகோவையசிறிது” என்பதனாலறிக. யாவர்மனக்கொள்பவரென்பது யாரென வகரங் கெட்டது. யாதிவ்வுரு என்பது யாவ திவ்வுரு வென வகர மிகுந்தது. என்னை? “பலரறிசொன்முன்யாவரென்னும், பெயரிடைவகரங்கெடுதலு மேனை, யொன்றறிசொன்முன்யாதென்வினாவிடை, யொன்றியவகரம் வருதலுமிரண்டு, மருவின்பாத்தியிற்றிரியுமன்பயின்றே” என்றாராகலின். அப்பேரமிர்து என்பது “வினையெஞ்சுகிளவியு முவமக்கிளவியு, மெனவெ னெச்சமுஞ்சுட்டினிறுதியு, மாங்கவென்னுமுரையசைக்கிளவியும், ஞாங்கர்க்கிளந்தவல்லெழுத்துமிகுமே” என்பதனால் வல்லொற்று மிகுந்தது. இச்செய்யுளின்கண் ணகநகர்புரப்பேனெனவே யா னரசனென்னுங் குலனும், புறநகர்சார்வுழியெனவே “ஒன்றேவேறேயென்றிருபால்வயி” னென்பதனால் ஒரு நகருள் அகநகரும் புறநகரும் என்னு மிடமும், உண்ணிகழுழுவலன்புடனின்றூட்ட வெனவே உழுவலன்பாற் பண்டும் பயின்றுவருகின்ற நட்பு இப் பிறப்பினுங் கூடிற்று ; இதுபோல இன்னு மிடையிடையே கூட்டநிகழு மென்பதூஉம், அப் பேரமிர்து பெண்ணியல் பெருக்கி யெனவே நலம்பாராட்டலா லவன் தன்மே லன்புடையா னென்பதூஉந் தலைமக ளுட்கொண்டுணரு மென்பதாம். இதனுள், பொன்மயமல்லாத சலமயமல்லாத என்பன முதலாய யாமே யறிவதல்ல தென்பதீறாய சொல்லெச்சங்களும், தலைவியுள்ளக்குறிப்பைக் குறித்தானென்னுங் குறிப்பெச்சமும் எஞ்சிநின்று விரிந்து முடிந்த வாறுங் கண்டுகொள்க. இச் செய்யுள் “அகன்றுபொருள்கிடப்பினு மணுகியநிலையினு... மாட்டெனமொழிப்பாட்டியல்வழக்கின்” என்பதனால் மாட்டென்னு முறுப்பாற் பொருள்கோள் நிகழ்ந்தவாறுங் காண்க. இது மருதநிலத்தலைமகன் பாலதாணையின் ஆயத்தைநீங்கிய மருதநிலப் புறநகர்த்தலைவியை யெதிர்ப்பட்டுக்கூடிய களவொழுக்கக் கந்தருவம். என்னை? “முதலொடும்புணர்ந்தயாழோர்மேன, தவலருஞ்சிறப்பினைந் நிலம்பெறுமே” என்றாராகலின். இனிவருஞ் செய்யுட்கு மிவ்வாறு |