இவைநான்கும் வினைக்குறிப்புக்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம். திணை - இதுவுமது. துறை - பழிச்சினர்ப்பரவல். மீனமதாயாமையாய்வெள்ளைவராகமதாய்த் தானவனைக்கொன்றுமறைதந்தானும்--வானவர்க்காய் வாங்குதிரைகடைநாண்மந்தரமேற்கொண்டானு மோங்குமகிலங்கொணர்ந்தானும், | (41) |
ஆளரியாயாடகனைச்செற்றானும்வாமனமாய்த் தாளிணையான்மூவுலகுந்தாயானுங்--கோளரிபோன் மாறுதிரட்காவலரைமாய்த்தமழுவாளியா யூறுதிரத்தேகுளித்தானும், | (42) |
அன்றுதனுராமனாகியிருபதுகைக் குன்றினுயிரைக்குடித்தானும்--வென்றியுடன் பார்திருத்துநாஞ்சிற்படையானும்பாண்டவர்க்கவ் வூர்திருத்தமுற்றளித்தானும், | (43) |
புண்டரிகத்தானைப்புரந்தானுமைந்நீல கண்டனிரப்பொழியக்கண்டானு--மண்டமினி மேலிலையிங்கென்னவிழுங்கியவேகோதகத்தோ ராலிலையின்மீதுதுயின்றான். | (44) |
இவைநான்கும் வினைப்பெயர்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம். திணை - இதுவுமது. துறை - கடவுள்வாழ்த்து. மாயோனெடியோன்மதுசூதனன்புவனந் தாயோன்முகுந்தன்சராசரங்க--ளாயோ னராரியரியச்சுதனாகணையான் முராரியழியாமுதல், | (45) |
மாதவன்கேசவன்வாமனன்கோவிந்தன் சீதரன்பூமகள்கோன்றேவேசன்--பூதலத்தை யுண்டோன்விரிசிறைப்புள்ளூர்ந்தோன்பகிரண்டங் கண்டோனிருதாந்தகன், | (46) |
|