பக்கம் எண் :

70மாறனலங்காரம்

மந்தாகினிபிறந்தவார்கழலோனேமியோன்
றந்தாவளமுரைத்தசால்பினோ--னெந்தை
திருமால்வரனுந்திபூத்தோனமரர்
பெருமான்பிரமன்பிதா,
(47)

கண்ணன்கருணாகரனமலன்காயாம்பூ
வண்ணன்கடல்வண்ணன்மைவண்ணன்--விண்ணவர்கோன்
றம்பிரானாரணனந்தாமத்தான்வேதாந்த
னெம்பிரான்முத்தனிறை.
(48)

இவைநான்கும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம். துறை - கடவுள்வாழ்த்து. ஒழிந்தவும் வந்தவழிக் கண்டு கொள்க. காபாலிக்குளகம் முற்றும்.

செம்பினையுருக்கிவாக்கித்திண்ணிதினகழிதூர்த்திட்
டும்பரின்முதலேவெண்பொனுவானமதமைத்தபின்றைப்
பைம்பொனார்செகதிகண்டம்பட்டிகைவகுத்திட்டோர்சா
ரிம்பர்நின்றேறயாளிச்சுருட்படியியற்றிமன்னோ,
(49)

பாங்கர்வேதிகைக்குத்தானம்பகுத்தரங்கினுக்குநாப்ப
ணோங்குபொற்சுவர்நிறீஇவித்துருமசாளரஞ்செய்தோவா
வீங்கிருடுணிக்குஞ்செய்யவிழுமணியதனான்மேல்வாய்த்
தாங்குமுத்திரம்வைத்துள்வச்சிரத்துலாந்தகவின்வைத்தே.
(50)

பச்சைநன்மணியையீர்ந்தபலகைமேற்பரப்பிநீலத்
தச்சுறுகொடுங்கைமூட்டியதன்புழையகத்தவாக
வச்சிரவளைகளோடிமணிசெய்வேதிகைமாண்டூணத்
துச்சிமேற்பலகைசிற்றுத்திரத்தினோடொன்றச்சேர்த்தே,
(51)

வெள்ளிவெண்பலகைநான்குவிரல்வியனீப்பின்றாக
வள்ளுறநிறைத்துவண்பொன்னாணிகளழுத்திக்கையா
லள்ளுபுதிரளுமொண்பொன்னரதனஞாங்கர்மேய்ந்து
தெள்ளிதினேழதாகத்திகழ்நிலம்புணர்த்துமாதோ,
(52)

வாரிநீணிலையுமேல்கீழ்மரீஇயநோன்படியுந்தாளுங்
கூர்கபாடமுமொன்றாகக்கொளீயமாண்மணிகடம்மாற்