ஏவொன்றுடக்கியிருபதுகைக்கார்வயிரத் தூவொன்றுடலந்துளைபடுத்த--காவொன் றரங்கத்தானல்லாதனைத்துயிருங்காத்தற் கிரங்கத்தானல்லாரெவர். | (85) |
இது வைதருப்பத்தெளிவு. இதற்குச் சொல்லின்முடிவாற் பொருடோன்றும். துறை - கடவுள்வாழ்த்து. தேனேமுளைமதியஞ்செந்தழல்பாரிப்பவிருந் தேனேயயலார்சிரிப்பவே--தேனே யிறைவகுளத்தாமரையோவெய்தார்வேளெய்து குறைவகுளத்தாமரையோகூறு. | (86) |
இது சொல்லாற் கவியருமையும் நோக்குடைப்பொருள்கோளுந் தோன்றத் தொடுத்தமையாற் கௌடத்தெளிவு. (இ-ள்) தேன்போலும் இனிய மொழியையுடையாய் ! இளம்பிறை யானது தழலைவிரிப்பவும் அயலார்சிரிப்பவும் இத்துணைப்போதும் உயிரைத் தாங்கியிருந்தேனே ! இங்ஙனமிருந்த வெனது துன்பமிகுதியும் நாண்டுறந்ததுங் கண்டு தேனையொழுக்காநின்ற வகுளத்தாமத்தை யுடையோர் அந்தோ மேவுகிலர் ; இனிக் காமனெய்து குறைந்துபோவன குளத்தின்கட் டாமரையொன்றேயோ, ஓடையிற் காவியும் ஆவியு மல்லவோ கூறுவாயாக ; என்றவாறு. ஏகார நான்கினுண் முன்னது விளி. இரண்டாவது திரக்கத்தின்கட் குறிப்பு. பின்னைய விரண்டு மீற்றசை. தாமரையோவென்னு மோகாரம் ஒழியிசை. திணை - பெண்பாற்கூற்றுப்பெருந்திணை. துறை - துன்பு மிகுதி தோழிக்குரைத்தல். உள்ளத்துணர்வெனுங்கண்ணுட்கொண்டுகாண்பதற்குங் கள்ளக்கருங்கண்கலுழ்வனகண்--டெள்ளிப் பிரியாரையுந்திருமால்பேர்நகரார்தூற்றத் தரியாதென்னுள்ளந்தளர்ந்து. | (87) |
(இ-ள்) எனதகத்தே யறிவென்னுங் கண்ணானது நங்காதலருட னென்னையு முட்கொண்டு காணாநிற்பதற்குப் புறத்தே தாமுங்காணாத |