மயலறவேயியற்றமிழ்செய்மகிழ்மாறன்றுடரியின்கண் மணந்தகாதல் புயலெனவேபுரைநறுமென்புரிகுழற்குப்புகல்வனினிப் புகலுமாறே. | (81) |
இது பாஞ்சாலச்சொல்லின்பம். பகுதி - மதியுடன்படுதல். துறை - குறையுறத்துணிதல். “குயிலாரு” மென்பதனையும் பாஞ்சாலச்சொல்லின்ப மெனினு மாம். வண்ணமுலைப்பொற்றாமரைமுகுளம்வீறழிந்து கண்ணெகிழாவண்ணங்கருதியோ--தண்மதியை மால்வைத்தமாநிதிவண்கோளூரில்வாணுதாஅன் மேல்வைத்தான்மேனாள்விதி. | (82) |
இது பொருளின்பம். இதனுண் முலையாகிய பொற்றாமரைமுகை யவிழாதிருப்ப வதன்மேலாகப் பிரமன் மேனாண் முகமென்று பெயரை யுடைய மதியைவைத்தா னென்னும் பொருளின்பம் வந்தவாறு காண்க. பகுதி - இடந்தலை. துறை - மருங்கணைதல். மேலைமலைக்கதிர்மறையக்குவிமரையுட்டேனசையான்மீளாவைகிச் சோலையில்வண்டினந்திறப்பவயற்கழுநீரிடந்தோய்ந்தசுரும்புமாதோ மாலையிற்றன்மனைபுகுதுமணமகனைவிறலியொடுமதங்கன்பாடிக் காலையினிற்றுயிலெழுப்பக்கடைதிறந்துபரத்தையிற்போகியகாட்சித்தே. | (83) |
இதுவுமது. துறை - நாடுவாழ்த்து. திரகாயத்திரிகருணைக்கிலக்காகுமுணர்வுடையோர்சித்திகாட்டப் பரகாயத்திடைபுகுந்துமறித்தொருகாயம்புகுமப்பான்மையேய்ப்ப வுரகாயத்துரிவையுரீஇயொருபரந்தளொருபாந்தளுரிபுக்கூர்ந்து வரகாயத்தகடுரிஞ்சும்பஃறலையமலைமுழைபோய்வைகுமன்னோ. | (84) |
இதுவுமது. மலைவருணனை. இவையிரண்டுங் குருகாமான்மியம். இன்பம் முற்றும். |