பக்கம் எண் :

பொதுவியலுரை91

உடன்போக்கு. துறை - பூத்தருபுணர்ச்சிக் கறத்தொடு நிற்றல். இவ்வாறு மெல்லினவண்ணத்தால் மெல்லெழுத்துச் செறிந்துவருதல் விரும்பாது வல்லினவண்ணத்தால் வல்லெழுத்துச்செறிந்தசொல்லோடும் வற்கெனத் தொடுப்பதே வேண்டுவர் கௌடர்.

புட்குழியுத்தமர்புட்கொடியத்தர்பொருப்பின்மடக்குயிலே
கட்டழல்கக்குகுழிச்சிறுகட்கரடத்ரிகடத்தொருமா
விட்புலமுற்றவிருப்பமிகுத்ததொர்வெற்றியனைக்குறுகா
வுட்குறவெற்றினனற்றதுதிக்கையொடுற்றமருப்பிணையே.
(89)

என்பது, புட்குழியென்னுந்திருப்பதியின்கண் ணுத்தமர், கருடக்கொடி யுயர்த்த சுவாமியார் பொருப்பிடத்து மடப்பத்தையுடைய குயிலே ! மிக்க அழலைக்கக்குங் குழிந்த சிறுகண்களையு முள்ளத்தறுகண்மையையுங் கவுளின்கண் மதத்தினையு முடையதோர் யானை, விண்ணோரனை வரும் விருப்பத்தை மிகுப்பதோர் வெற்றியையுடையானொருவனைப் பாயும்படிக்குக் குறுகினகாலத் ததனுள்ளமுட்க வவ னதனை வாளாலெறிதலு மதன் றுதிக்கையுந் துதிக்கைபற்றிய விருகோடு முடனே யற்ற வென்றவாறு.

இங்ஙனம் வல்லிசைவண்ணத்தால் வந்தவாறு கண்டுகொள்க. அஃதே லிதன்முதனூல் செய்த தெண்டியாசிரியர் “செறிவெனப்படுவது நெகிழிசையின்மை” யென வைதருப்பச் செறிவிற்குக்கூறியதனை விரும்பாது ஒருதிறத்தெழுத்தானே நெகிழத்தொடுப்பதே கௌடச்செறி வெனவேண்டிய திந்நூலுடையாருட்கொண்டு மிங்ஙனம் வற்கெனத் தொடுத்தன் முதனூலோடும் வழிநூன் மாறுகொளக்கூறலென்னுங் குற்றமாமாலோவெனின், நன்றுசொன்னாய் ! அவர்தாமே “விரவத் தொடுப்பது சமநிலையாகும்” என்பதற்குச் “சோகமெவன்கொலிதழி பொன்றூக்கின” என்பதனுள் மூவினமும் விரவத்தொடுத்ததனை வைதருப்பச்சமநிலையெனவும், விரவுதலுள்ளும் வல்லெழுத்துச்செறிய இடர்த்திறத்தைத்துறபொற்றொடிநீயிடித்துத்தடித்துச், சுடர்க்கொடித் திக்கனைத்துந்தடுமாறத்துளிக்குமைக்கார்’ என வற்கெனத் தொடுப்பதே கௌடச்சமநிலையெனவும் காட்டினமையானும் இவ்வண்ணங் கூறாக்கால் வைதருப்பச் செறிவிற்கும் வைதருப்பச் சமநிலைக்கும் வேற்றுமையின்மையானு மிச்செறிவிற்கு மோசையே நோக்கமென்பதனா