னும் பாஞ்சாலத்தோடும் பாகமூன்றெனக்கோடலானும் வைதருப்ப முதலிய மூன்றற்கு மூன்றுவண்ணமுஞ் சித்திரகவியிற் சாராது செறித்தார் ; அன்றியும், பாயிரத்துள்ளும் இரண்டிடத்தாற் செய்தார் என்பதனா லுலகவழக்கினும் அருமையோடும் வற்கெனத் தொடுப்பானைக் கௌடகவியென்ப துட்கொண்டமையானுந் தன்கோட்கூறலென்னு முத்தியானும் இவர்க் கெழுத்துச் செறிவு மோசையு மவ்வவபாகத்தின் படியே செறித்த னோக்கமாதலானும் இவ்வண்ணங்கூறுதன் மாறுகொளக் கூறலென்னுங் குற்றமாகாதென்றுணர்க. முல்லைமுகைவெல்லுநகைநொய்யநடையையவிடை மொய்யளகநவ்விவிழியா யொல்லைநடையுள்ளதினிவெள்ளிடையதில்லையென வுள்ளபொழில்செய்யினயல்சூழ் மல்லைநகரெல்லையிவணல்லிமலர்வல்லிபுணர் வள்ளலுறையெல்லையவணே தொல்லைமறையுள்ளபடிதெள்ளியுணரையருறை துய்யபதிசொல்லிலுவணே. | (90) |
என்பது, முல்லையரும்பைவெல்லும் நகையையும் மெல்லிய நடையையும் உளதிலதென் றையமுறு மிடையையும் நெருங்கினகுழலையுமுடைய மான்போனோக்கத்தாய் ! உனக்கினி யொருகணப்பொழுதே நடையுள தஃதியாதென்னில் இவண் வெளியென்பது சிறிதுமில்லையெனவுண்டாய சோலைகள் செய்யினது பக்கமெல்லாஞ் சூழப்பட்ட திருக்கடன்மல்லை யாம். அவண் தாமரையாளைத்தழுவும் திருமாலாகியவள்ளலுறை தானம். உவண் கூறுகிற பழைய மறையின்கணுள்ள நுட்பமெல்லா மவை சொன்னபடியே தெள்ளிதாயுணரு மறையோருறையும்பதி யாகலா னென்றவாறு. இது பாஞ்சாலச்செறிவு. என்னை? இடையினமாகிய வெழுத்து மிகவுஞ்செறிய வியைபுவண்ணமுமுற் றவ்வெழுத்தானாயசொற் செறிய வந்தமையா னெனக்கொள்க. இங்ஙன மூன்று வண்ணமுமுற வாங்காங் கவ்வவினமிகப்பாடுவதன்றி வேற்றினஞ் சிறிதும் விரவாது தொடுப்பின் மூவினப்பாட்டானும் விரவாதுபாடுஞ் சித்திரகவியிற் சாருமாதலாற் |