பக்கம் எண் :

பொதுவியலுரை93

பிறவினமுஞ் சிறிது விரவுவதே முறையென்றுணர்க. இவற்றுள் முன்னையது பகுதி - நடுங்கநாடல் ; துறையுமது. இது பகுதி - உடன் போக்கு. துறை - பதிபரிசுரைத்தல். இவைமூன்றும் எழுத்துச்செறிவு.

மறைமுரசந்தாமமகிழ்வழுதிநாடர்
துறைபொருநைவெற்பூர்துடரி--யுறைகுருகை
யஞ்சம்பராங்குசம்வெள்ளானைகொடியாணைமா
பஞ்சகலியாணன்பரி.
(91)

என்பது, வழுதிவளநாடர் துறை - பொருநை ; வெற்பும் ஊரும் - துடரியும் உறையுளாங் குருகாபுரியும் ; பரி - பஞ்சகலியாணன் ; மா - வெள்ளானை ; ஆணை - சீபராங்குசம் ; கொடி - அன்னம் ; தாமம் - மகிழ் ; முரசு வேதம் என்றவாறு.

இதனுள் வழுதிவளநாடர் என்பது மத்திமதீபம். அதுவே நாடுந் திருநாமமுமாம். வெற்பூர் - நிரனிறை. பரி மா ஆணை கொடி விதலை யாப்பும், தாமம் மகிழ், முரசு மறை என மொழிமாற்றுமாகத் தசாங்க மென்னுஞ் சின்னங்களாகிய பல்பொருட் செறிவோடும் பல பொருள் கோளுஞ் செறிதலா னிது பொருட்செறிவு. துறை - தசாங்கவாழ்த்து.

மறந்தாங்கித்தெவ்வடுவைந்நுதிதாங்கியிருட்பிழம்புமடியச்செந்தீ
நிறந்தாங்கியிடங்கரின்வெண்ணிணந்தாங்கியனைத்துலகுநியதிகாக்குந்
திறந்தாங்கியொளிர்திகிரிப்படைதாங்கித்திருவடிபொற்சென்னிதாங்கி
யறந்தாங்கிவளம்புகழ்வாரறந்தாங்கியவரெனுமிவ்வங்கண்ஞாலம்.
(92)

தழற்பாணிகறைகெழுவச்சிரபாணிமிளிர்படிகத்தாமம்வேய்ந்த
நிழற்பாணிவிழைந்தகமண்டலபாணிமுதலெவர்க்குநிபனேயாய்வேய்ங்
குழற்பாணிகொடுதொறுவின்குழுவழைத்தமழைமுகில்பார்குளிர்ப்பானீன்ற
கழற்பாணிதனைப்புகழ்சக்கரபாணியனைத்துயிர்க்குங்களைகணாவான்.
(93)