இவையிரண்டும் ஒருவகைச் சொற்செறிவு. இங்ஙனம் வந்த சொற்செறிவும் பொருட்செறிவும் மூன்றுநெறியார்க்கு மொக்கும். துறை - செந்துறைப்பாடாண் பாட்டு. செறிவு முற்றும். விழியுங்களபமுலையும்புன்மூரலும்வேயுமுந்திச் சுழியும்முரோமவொழுங்குங்கண்டேம்வண்டுசூழ்ந்துசெந்தேன் வழியுந்திருமகிழ்மாலைப்பிரான்வெற்பில்வல்லிசெவ்வாய் மொழியுந்துணைநெஞ்சமேசெவிக்கேயென்றுமூழ்குவதே. | (94) |
இது வைதருப்பச்சமனிலை. துறை - கிளவிவேட்டல். பனிப்பிறைப்பற்றுளைக்கட்செவித்துத்திப்பணாடவிமேற் குனித்தபொற்சிற்றடிச்சித்திரக்கார்குருகேசன்வெற்பிற் றுனித்தழற்கட்களிற்றைக்கொடுஞ்சீயந்துரத்திருள்வாய்த் தனித்துறற்குய்த்துணர்த்துங்கதிர்வேலவன்றாழ்குழலே. | (95) |
இது கௌடச்சமனிலை. சூத்திரத்துள் நிலையென்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க. தனித்துறற்கு - கங்குலின் கட்டனித்துக் குறிவழிவருதற்கு. உய்த்துணர்த்தும் - என்னுள்ளங் கொள்ளச் செலச்சொல்லி யுணர்த்தாநிற்கும். கதிர்வேலவன் - ஒளியையுடைய வேலவன். தாழ்குழலே - தாழ்ந்தகுழலினையுடையாய். யான் இதற்குச் செய்யவேண்டுவ தென்னென்றவாறு. பணாடவி - ஆகுபெயர். பகுதி - இரவிற்குறி. துறை - இரவுவரவுணர்த்தல். இடிக்குங்கடகளிற்றான்சடகோபனியலிசையாய் வடிக்குந்தமிழ்மறைபாடியமாறன்மணிவரைமே னடிக்குங்களிமயிலேவருந்தேனுமர்நல்வரைப்பூங் கொடிக்குங்கொழுகொம்பராமெமர்மாடக்கொடிக்கழையே. | (96) |
இது பாஞ்சாலச் சமனிலை. பகுதி - இயற்கை. துறை - இட மணித்துக்கூறி வற்புறுத்தல். இவற்றுள் மூவினமும் விரவிவந்தவாறு காண்க. மூன்றனுண் முதற்பாட்டும் மூன்றாம் பாட்டும் கிளவிமணிமாலை. சமனிலை முற்றும். |