பக்கம் எண் :

பொதுவியலுரை95

எழுகாதலினாலிருகாவியுணீ
ரொழுகாமதியாலுலைவாய்--மெழுகா
யுருகாதணையாருயிர்காவலர்பே
ரருளாளருமாமவர்.
(97)

இதனுள், இருகாவியுணீர் - இரண்டுகண்ணு ணீர். ஒழுகா என்றது ஒழுகவென்பத னெதிர்மறை. உருகாதணையாரென்பது வினையெதிர் மறுத்தவினையெச்சம், அணையாரென்னும் வினைகொண்டது. பேரருளாளருமாமென்னு மும்மையால் உயிர்காவலருமாம் என்னு மும்மை விரிக்க. உயிர்காவலருமாய்ப் பேரருளாளருமாக, உருகு மென் காதல் கண்டு முருகியணைகின்றில ராதலா லிஃ தென்வினையன்றோ வென்றவாறு.

திணை- பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை - நிலவுகண்டழுங்கல். இது தூங்கிசைச்செப்பலோசைத்தாய்வந்தமையால் வைதருப்ப வின்னிசை. என்னை? “இயற்சீர்வெண்டளையான்வரும்யாப்பைத், தூங்கிசைச்செப்ப லென்மனார்புலவர்.” என்றதனா லறிக. இவ்வாறு விரும்பா தேந்திசைச்செப்பலோசைத்தாய்த்தொடுப்பதே வேண்டுவர் கௌடர்.

குஞ்சரமாமெய்ததுவன்கோதண்டங்கூடாமல்
வெஞ்சரம்பாய்வித்தனரால்வேட்டைதான்--வஞ்சகமே
யாங்கடவார்பூம்புனமீங்காரிவரென்றேயறியேம்
வேங்கடவாணன்சிலம்பின்மேல்.
(98)

என்பது, வேங்கடவாணன்வரையிடத் திவ ரெய்ததுங் குஞ்சரமாம் ; வில்லுமின்றியே தழையே வில்லாக வெம்மையைச்செய்யும்வாளியைப் பாய்வித்தனராகையா லிவர் வேட்டைமேலிட்டுவந்தது தான் வஞ்சமே யாம் ; அதுவுமன்றி, நமது பொலிவையுடைய புனத்தைவிட்டுநீங்கு கின்றிலரால், இவர் யாரென்றும் வந்தகாரணம் யாதென்றுந் தெளிகில மென்றவாறு.

பகுதி - இருவருமுளவழி யவன்வரவுணர்தல். துறை - ஐயுறுதல். இஃ தேந்திசைச்செப்பலோசைத்தாய்வந்தமையாற் கௌடவின்னிசை. என்னை? “வெண்சீர்வெண்டளையான்வரும்யாப்பை, யேந்திசைச்செப்ப லென்மனார்புலவர்” என்பதனாலறிக.

மானபரனீந்தமணியாழிகைக்கொடுத்துச்
சானகிதன்னாவிதளிர்ப்பித்தான்--மீன