பக்கம் எண் :

96மாறனலங்காரம்

நெளிதரங்கவேலைநெறிகடந்துதேவர்
களிபுரந்தசேயெமதுகண்.
(99)

என்பது, பெருமையுடைய பரமனாகிய இரகுநாதன் கொடுத்த மாணிக்கத் திருவாழியைக் கொடுத்துச் சனகராசன்புதல்வி திவ்வியான்மாவைத் தழைப்பித்தான் ; அவன் யாரெனின், மீன்களையுடைத்தாய் நெளிக்கப் பட்ட திரையையுடைய சமுத்திரத்தி னெல்லையைக்கடந்து தேவர்க் கெல்லாங் களிப்பைக்கொடுத்த அஞ்சனைபெற்ற புதல்வன், எனக்கென்னுறுப்பிற்சிறந்த கண் ணென்றவாறு.

இஃ தொழுகிசைச் செப்பலோசைத்தாயே வந்தமையாற் பாஞ்சால வின்னிசை. என்னை? “வெண்சீரொன்றலுமியற்சீர்விகற்பமு, மொன்றியயாப்பேயொழுகிசைச்செப்பல்” என்பதனா லறிக. இம்மூன்று விகற்பமு மூன்று நெறியார்க்கு மொக்கு மென்பாரு முளர். திணை - பொதுவியல். துறை - தூதுவென்றி.

நாட்டங்களிபற்றநாவுநசைபற்ற
வேட்டிற்பலர்கையிணைபற்றத்--தோட்டிலஞ்சிக்
கன்புற்றமுத்தர்பெருமானடிபரவி
யின்புற்றவர்க்கடிமையாம்.
(100)

இவ்வாறு வரும் பொய்ந்நிலப்பட்ட வின்னாவிசை மூன்றுநெறியாரும் வேண்டாரெனக்கொள்க. தெண்டியாசிரியர் ஒழுகிசையென்பது மிது. திணை - பாடாண். துறை - பழிச்சினர்ப்பரவல். இன்னிசை முற்றும்.

மண்ணோர்தொழுஞ்சேறைமாயோன்மணிமார்பிற்
பெண்ணோர்மனுகுலமாம்பெற்றியாய்--விண்ணோர்
மருந்துதலைப்பெய்திருப்பமம்மர்கூர்நஞ்ச
மருந்துதலைச்செய்பவரிங்கார்.
(101)

என்பது, உலகின்கண்ணுள்ளார்வணங்குந் திருச்சேறையின்கண் மாதவன் றிருமார்பிலிருக்குந் திருமகள் மனுகுலத்துட் டோன்றிய தொன்றா மியல்பினையுடையாய் ! விண்ணிற் றேவர்பானமாகிய அமிர்தமானது தம்மிடத்தே தமதாகவிருப்ப அதனையு மருந்தி மருந்து