பிறிதில்லாப் பெரும்பிணியைத்தரும் நஞ்சையு முண்ணாநிற்பவ ரிவ் வுலகின்கண் யாவர்தா மென்றவாறு. பகுதி - பரத்தையிற்பிரிவு. துறை - நினைவறிகண்புதை. இது வைதருப்பவுதாரம். என்னை? தம்மிடத்திலே பெறுதற்கரிய அமிர்த மெளிதாயெய்தியிருப்ப வதனை யுண்ணாநின்றவர் அயலேயிருக்கு நஞ்சினையுஞ் சென்றுண்ண விரும்புவா ருலகின்கண்ணில்லையால், அதுபோல நின்னிடத் துவட்டா வின்பந்துய்க்கின்ற யான் பிறரிடத் துவர்ப்புடைத்தா மின்பந் துய்யேனென்பது குறிப்பினாற் கொள்ளக் கிடந்தமை யினானெனக் கொள்க. நாதன்மகிழ்மாறனன்பனுவல்கற்றுணர்ந்து போதந்தழைந்தபுனிதர்தாம்--வேதம் விதித்தவொருமூன்றின்மெய்ம்மையுணர்வான் மதித்தொருநூலோதார்மறித்து. | (102) |
இதுவும் வைதருப்ப வுதாரம். என்னை? மகிழ்மாறன் பனுவல் கற்றுணர்ந்தார் தத்துவங்கண்மூன்றி னுண்மையுணரவேண்டி மறித்தொரு நூலோதாரெனவே யத்தத்துவங்கண்மூன்றினையு மதுதானே மயக்கமறக் கூறுமென்பது குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானெனக் கொள்க. வேதம்விதித்தவொருமூன்றாவன :- சித் தசித் தீச்சுரம். மெய்ம்மை - உண்மை. உணர்வான் - உணரவேண்டி. மதித்து - உட்கொண்டு. மறித்து - மீண்டும். திணை - பாடாண். துறை - பனுவல்வாழ்த்து. காழில்கனியுண்கடுவன்களங்கனியை யூழிற்பருகியுருகுதிரு--மூழிக் களத்தாதியைமதங்காகாமக்குழவி வளத்தாரிடந்தேடுவாய். | (103) |
என்பது, காலைமங்கலம் பாடவந்த யாழ்ப்பாணனே ! பரலில்லாதே முழுது மென்மையு மினிமையுமுடைய அரம்பைக்கனியை யச்சமின்றி யுண்ணாநின்ற கடுவன் அகத்துமுழுதும் பரலாய்ச் சிறிது புறமென்மையு மற்பச் சுவையுமுடைய களங்கனியையு முறையேபோலப் பருகி யதன்சுவைக்கு முள்ளமுருகுந் திருமூழிக்களத்து முதல்வனைக் |