பக்கம் எண் :

54 பாசவதைப் பரணி

 

ஒற்றர் அஞ்ஞனிடம் சென்று தெரிவித்தல்

 
338.

இருந்த காலையி லென்றுந் தெளிவிலா
முரிந்த பாசமன் முன்னோடி யொற்றரே.

(71)
 

வேறு

 

339.

முந்து நான்மறை முடியில் வைகிய
      மூல காரணன் ஞால மீதினில்
வந்து தித்தனன் மனித னாவெனும்
      வார்த்தை யெங்கணும் வார்த்தை யென்னவே.

(72)
  

340.

இடுக்க ணின்றியிங் கின்று காறுமே
      இனிது வாழுமற் றென்னை யீசனார்
வடுக்கொண் மானிட னாகி வென்றிட
      வந்து ளாரெனும் வார்த்தை வார்த்தையோ.

(73)
   

341.

இல்லை யொன்றுமே யென்னு நீருமின்
      றிங்கு வேறுள போலி யம்பினீர்
சொல்லு மென்னலு மின்று சொல்லுகோம்
      தொல்லை மாநிலஞ் சொல்லும் வண்ணமே.

(74)
   

342.

சமய மோதுவார் தம்மை வம்மெனத்
      தாமு மங்குள தன்மை கண்டிலம்
அமைய வோதுவா ரோது கின்றவா
      றறிய வோதின மரச வென்னவே.

(75)
 

அஞ்ஞன் கூற்று

 

343.

சொன்ன சொல்லினை மெய்ய தென்பவர்
      சுற்ற முற்றவுஞ் சூறை கொள்ளென
மன்ன வன்னிகல் கொண்டு துன்மதி
      மந்த்ரி தன்னொடு மலைவ தெண்ணவே.

(76)

340. “இனிதினால் வாழு மென்னை யீசனென் றொருவன் வெல்ல, மனிதனாய் வந்தா னென்னும் வார்த்தையும் வார்த்தை யாமோ” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘வந்தனரெனும்’

341. “ஒன்றில்லை யெனுநீரு மொன்றுண்டு போலே யுரைத்தீர்க ளென வொற்றர்தாம், இன்றில்லை யென்னாதி ரேமிந்த வுலகத்தி னியல்கூறி னேமென்னவே” அஞ்ஞவதைப்.

342. தாமுமென்றது சமய மோதுவார்களை.

பி - ம். ‘ஓதினமமர்க வென்னவே’

343. “சொன்னார்கள் சொன்னத்தை மெய்யென் றிருந்தார்கள் சுற்றஞ் சிறைச்செய்கவே” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘சொல்வினை மெய்ய தென்பவர்’ ‘மலைவ தென்னவே’