| வேறு | | 344. | காமன் முதல படைத்தலைவர் கலங்கா வயவ ரவரிருப்பச் சேம மில்லா தவர்போலச் செருவுக் கயர்தல் திறனன்றால். | (77) | | | | 345. | என்று கூறு மமையத்தின் எழுந்து காமன் றன்னுடைய வென்றி கூற வறிவில்லா வேந்தைத் தொழுது விளம்புவனால். | (78) | | காமன் கூற்று | 346. | செய்ய மேனி செம்பாகம் கறுக்க வந்தச் சிவனாரை எய்த வாளி யிருப்பவுமற் றென்னைக் கறுப்பார் வெறுப்பாரே. | (79) | | | | 347. | கோலி யெய்யு மலர்ப்பகழி கூசித் தொடுப்பப் பாலாழி மாலின் மார்பின் வடுக்கண்டும் வருவா ரமர்க்கு வெருவாரே. | (80) | | | | 348. | பூவி லொன்றும் புண்ணியனார் புதல்வி பொம்மன் முலைதோய ஏவி லொன்றில் வணக்கியநான் ஈண்டை மனிதர்க் கெளியேனால். | (81) | | | | 349. | பொன்னா டாளும் யானையொரு பூனை யாகிப் புறம்போத அந்நா ளாண்மை செய்தாரும் அயலா ரேமற் றியானலனால். | (82) |
346. கறுப்பார் - கோபிப்பார். வெறுப்பாரே : ஏகாரம் எதிர்மறை. “பண்டொர் நாண்மலர் பட்டின்று மக்கறைக், கண்டன் மேனிசெம் பாகங் கறுத்ததே” (அஞ்ஞவதைப். ), “விடைவல் லோனும், பாதாதி கேசாந்தம் பாதியுடல் கறுத்து” பிரபோதசந்த்ரோதயம், 26 : 6. 347. மார்பின் வடுவென்றது திருமகள் இருக்கும் இடத்தைக் குறித்தது. “வேலை ஞாலத் தவரென்னை மீறவோ, மாலின் மார்பின் வடுக்கண்டு வைத்துமே” அஞ்ஞவதைப். 348. புண்ணியனார் - பிரமதேவர். புதல்வி யென்றது திலோத்தமையை. வணக்கிய - வளைத்த. “விதியு மென்றன் விதியினை வெல்லுமோ, மதிய ழிந்து மகட்கு மயங்குமே” அஞ்ஞவதைப். |