350. | அள்ளி யவுண ருயிர்குடித்த அயிலோன் புயபூ தரமனைத்தும் வள்ளி படர மலர்பறித்துத் தொடுத்தே னின்று விடுத்தேனோ. | (83) |
| | |
351. | மதியா ரான கலாதரனார் மயங்கிக் குருவின் மனையாளைத் துதியா ரிமையார் பலர்காணத் தோயப் பொருதார் பிறரேயால். | (84) |
| |
352. | நன்று போல முன்னெய்தி நஞ்சு போல நனிகாந்திக் கொன்று ஞாளி யெனப்பெருமால் கொடுப்பேன் வென்று படுப்பேனால். | (85) |
| | |
353. | பெற்றாள் வயினுந் தன்வயிற்றுப் பிறந்தாள் வயினு மோருதரத் துற்றாள் வயினு முறவுள்ளம் ஓர்வா ளியினா லுடைப்பேனால். | (86) |
| | |
354. | எண்ணு மாறே துணிவிப்பன் இசையார் தமையு மிசைவிப்பன் நண்ணு மாறே முன்னொடுபின் நாடா வண்ண நலிவேனால் | (87) |
| | |
355. | சாந்தங் கொண்ட தபோதனரும் தடமென் முலையார் தம்பிறகே காந்தங் கொண்ட விரும்பென்னக் கவ்விச் சுழலக் கலக்குவனால். | (88) |
| | |
356. | தண்ணென் மதியை யழலென்றும் சாந்த மதனை விடமென்றும் வண்ண மலரை யரமென்றும் மயங்கத் தியங்க மலைப்பேனால். | (89) |
| | |
357. | கொந்தார் மலர்ப்பூந் தாதளைந்து குளிர்ந்து மெல்லக் குலவிவரு மந்தா நிலமாந் தேர்கடவின் மாற்ற வெனையா ராற்றுவரே. | (90) |
350. அயிலோன் - முருகக் கடவுள்.