| | | 358. | சித்த மெவையுந் தனைப்போலத் தெருமந் திருள வருங்கங்குல் மத்த யானை மேற்கொண்டால் வாகை புனைவார் மானிடரே. | (91) | | | | 359. | தரங்க வுததி யெனவிண்ணிற் றாவுஞ் செவ்வாய்ப் பசுங்கிள்ளைத் துரங்க மேறி யுகைக்குங்காற் றோலார் ஞான நூலாரே. | (92) | | | 360. | பொன்னிற் குலவு மோரிரண்டு பொருப்பு விருப்பி னுடன்பரித்து மின்னிற் குலவு மென்படைக்கு மெலியா தெவரே வலியாரே. | (93) | | | | 361. | மேவுந் தேமா மலர்க்காவின் விரைத்தா தாடித் தளிர்கொழுதிக் கூவுங் குயிற்கா களவொலியாற் குழையார் மற்றெவ் வுழையாரே. | (94) | | | | 362. | ஓவா விரவா மும்மதத்த உபய வயக்கோட் டொருத்தலின்மேற் றாவா மதிவெண் குடைகண்டாற் றாங்கி நிற்பா ரீங்காரே. | (95) | | | | 363. | காவி லன்றி லிருந்திரங்கக் கழுநீர் மலர்ந்த கழிக்கானற் றாவில் கடற்பே ரிகை முழங்கிற் றரிப்பார் துறவு பரிப்பாரே. | (96) | | வேறு | | 364. | பொருப்புச்சிலை யேமுதல் புன்சிலையென் கருப்புச்சிலை யின்வலி காட்டுவதே. | (97) | | | | 365. | எந்நாணுள நாள்பல வெத்துணையும் என்னாணுள பூவிடை யேறுவதே. | (98) |
359. தரங்க உததி - அலைகளையுடைய கடல். 360. பரித்து - தாங்கி. படை யென்றது பெண்களை. 361. ஒருத்தல் - யானை. தாங்கி - தடுத்து. 364. பொருப்புச் சிலை - மேருமலையாகிய வில். 365. பி - ம். ‘என்னாணுள நாள்பல’ |