| 366. | அஞ்சாவலர் வெங்கணை யெங்கையவேல் அஞ்சாவலர் வெங்கணை யங்குளதே. | (99) | | | | | 367. | புண்வேலெறி தப்பினும் போர்ப்படையின் கண்வேலெறி தப்பினர் காணெவரே. | (100) | | | | 368. | அங்கங்குமி றுந்திற மங்களமென் சங்கங்குமி றிற்சமர் வேறுளதே. | (101) | | | | | 369. | பொருப்புக்குடை யார்முதல் பூண்முலைமா மருப்புக்குடை யாரெவர் மன்னவனே. | (102) | | | | | 370. | எத்தேர்நினை வுற்றிடி னும்பொருவ தத்தேரணி பெற்றக லல்குலதே. | (103) | | | வேறு | | 371. | போதுவிரி காவுமொளி பொங்குமண லாறும் பூகவன முந்தடமு மோடைபொலி கின்ற தாதுவிரி கானலொடு தாவிலிசை யெழுநம் தாரணிவி டாதெனது போரணிவி டாதால். | (104) | | | | | 372. | பாலிதுகொல் தேனிதுகொல் பாகிதுகொ லினிய பழமிதுகொ லமுதிதுகொல் பண்ணிதுகொல் காம நூலிதுகொ லெனமகளிர் நுவலுமொழி யுளதேல் நுண்ணுணர்வு றாதெனது நோன்மையும றாதால். | (105) | | | | | 373. | சேவின்மணி யோசையொடு செய்யகுழ லோசை செவிப்புல னுழைந்தளவி லேயுருகி நைந்து | |
368. அம் களம் என் சங்கம் - அழகிய கழுத்தென்னும் சங்கு. 369. பொருப்புக் குடையார் - திருமால். 371. “தேனிலவு பூகவன முந்தடமு மியாறுஞ் செய்யவிசை யேழுமுயி ருய்யவரு காலும், வானிலவு மாளிகையும் வாணிலவு மென்கை மாமலரு முள்ளளவும் வந்துணர்வு றாதே” (அஞ்ஞவதைப். ), “மேவுமென் னுதவி யாம் வீணையு மேடையும், காவுநன் னதிகளுங் கலவையும் புதுமணற், பாவுதண் குன்றமும் பஞ்சவா சமுநறும், பூவுமுள் ளளவுமார் போதமுள் ளார்களே” பிரபோத. 26 : 16. 371. பூகவனம் - கமுகந் தோட்டம். பி - ம். ‘யேழும்’ 372. நோன்மை - வன்மை. |