| | தாவின்மயல் கொண்டுவிழு மானிடர் தமக்கே சமர்க்குடைவ னேலினிய தென்சமர் தரைப்பால். | (106) |
| வேறு | |
374. | மறந்தவர்க ளல்லர்மட மாதரை மனத்திற் றுறந்தவர்கள் போல்வரவர் சொல்லுமொரு சொல்லோ. | (107) |
| | | |
375. | கனவின்மட மாதரியல் கண்டுருகு வாரே நனவினவ ரியல்கரண நசைபெருக லாரோ. | (108) |
| | |
376. | வள்ளவள வுள்ளமுலை வஞ்சியிடை நல்லார் உள்ளளவு மிங்கெனையு டைப்பவரு முண்டோ. | (109) |
| | வேறு | |
377. | கண்வலைப் பட்ட மீனம் பிழைத்தலு மொருகாற் காண்டும் பெண்வலைப் பட்ட மாந்தர் பிழைத்ததுண் டாகிற் பேசும். | (110) |
| | | |
378. | புணர்முலைத் துரகம் பூட்டிப் புருவவில் லுருவக் கோலி உணர்வற வல்குற் பொற்றே ரூர்வரேல் யாவ ருய்வார். | (111) |
| | வேறு | |
379. | தொடுப்பனவு மைங்கணையே தொல்லுலக மொருமூன்றும் படுப்பனவு மவைகொண்டே பராசயமு மெனக்கின்றே. | (112) |
| | வேறு | |
380. | ஓருருவை யீருருவா யுடைக்கின்ற துலகம்பே ஈருருவை யோருருவா யிசைக்கின்ற தெனதம்பே. | (113) |
| | | |
381. | பூவாளி யீதென்பார் பொருளறியார் பொருளறிவார் பூவாளி யீதென்பார் பொருவாளி யைந்தையுமே. | (114) |
| | கோபன் கூற்று. | |
| | வேறு | |
382. | என்று காம னிகலேற் றிருத்தலும் துன்று கோபன் றொழுதிது சொல்லுவான். | (115) |
373. சேவின் மணி - காளையின் கழுத்திற் கட்டப்படும் மணி.
377. கண் என்றது வலையின் இடை வெளியை.
379. பராசயம் - தோல்வி.
380. 52-ம் தாழிசையைப் பார்க்க.