| 383. | தெள்ளியது வெனச்சிவனார் செழுங்கமலா சனர்சென்னி கிள்ளியது மென்னுடைய கெம்பீரம் பிறிதின்றால். | (116) | | | | | 384. | கடல்கனலச் சிலைகோலிக் கரைகோலிப் பசுந்துளவோன் உடல்கனலத் தசமுகனை யொறுத்ததுமென் னூற்றமதால். | (117) | | | | 385. | பார்த்தோர்க்குப் பழியாகப் பசுங்கதிர்கால் வெண்மதியை வேர்த்தோனும் வேறலனென் விதிபிழையா விநாயகனால். | (118) | | | | | 386. | சூரறுத்து மலையறுத்துத் துரிசறுத்தோ னவுணர்கிளை வேரறுத்து நிலைநிறுத்தும் விசயமுமென் விசயமதால். | (119) | | | | | 387. | நக்கனார் வெகுண்டேவ நனிவீர பத்திரனார் தக்கனார் மகஞ்சாயச் சாடியதென் சதுராமால். | (120) | | | | | 388. | குரங்குமுக வெனவயிரங் கொண்டிருபஞ் சானனனைக் குரங்குகளினழிகவெனக் கொதித்ததுமென் கொற்றமதால். | (121) | | | | | 350. | சந்திரனை வைதழன்ற தக்கனோ வகல்வானத் திந்திரனை வைதழன்ற விருந்தவனு மென்வசமால். | (122) | | | | | 390. | சீர்முகந்த முனிவையச் சீறியெதிர் வைதழல நீர்முகந்த நிருபனுமென் னெறிபிழைத்தா னல்லனால். | (123) | | | | | 391. | இரக்கமின்றி யயலொருவ னிடுந்தசைகண் டிகலாசை அரக்கனென்ற விருந்தவனென் னாணைவழி நின்றவனால். | (124) | | | | | 392. | திருந்துமொரு மகப்பரியைத் தேடறுபா னாயிரவர் அருந்துகளாய் விழக்காயு மவனுமென தடித்துகளால். | (125) |
383. கெம்பீரமென்பது இங்கே ஆழமென்னும் பொருளையுடைய தன்று. “ஓதிமனையோர், சிரமறச் செய்ததார் தேர்வுறாதார்களே” பிரபோத. காமனாதியர் வீர. 26. 384. “மறுக வுக்கிரத் தொழில ரக்கர்தம் மனமும் வாரியு மதிளிலங் கையுந், தெறுகனற் கொளச் சிலைவ ளைத்ததும் சிரமு திர்த்ததுஞ் சினமிகுத்தவே” அஞ்ஞவதைப். 386. விசயம் - வெற்றி. 388. இருபஞ்சானனன் - இராவணன். கொதித்தவன் நந்தி. 350. இருந்தவன் - தூர்வாசர்; கௌதமமுனிவரெனினுமாம். 390. முனி - வசிட்டர். நிருபன் - கல்மாஷபாதன் என்னும் அரசன். 391. இருந்தவன் - வசிட்டர். 392. அறுபானாயிரவர் - சகரர். அவன் - கபிலமுனிவர். பி - ம். ‘மகத்துவரத் திகழுமாக வாயிரமு மருந்துகளாய்’ அரக்கன் என்ற - அரக்கனாகக் கடவாயென்று சபித்த. |