பக்கம் எண் :

94 பாசவதைப் பரணி

621.

நோக்குதனோக் கிறத்தலென நோக்கா வண்ணம்
      நோக்கழியச் சிதைத்திட்டு நோக்க வுந்தித்
தாக்குமதைத் தவிர்த்தொழியா திறுகி யாங்குத்
      தகுவதுதாம் புரிந்துலவாத் தன்மைத் தாயே.

(354)
   

622.

குவித்துவிரித் ததிற்றெருமந் துழற்றும் பொல்லாக்
      கொடியவிருட் படலமது குலைகுலைய விரைவாற்
பவித்துமிட லுறுத்ததனிற் பொலியுஞ் சோதிப்
      பரிசுபெறும் பிரபையிட்டுப் பரிந்திட் டாங்கே.

(355)
   

623.

உவகையுடன் கலுழ்ச்சியகத் தெளிவு மற்றை
      உளக்கலக்க நிறைந்திகத்தே யுலவா தாகி
இவகைதனிற் செலுத்தலுடன் றிரித்த றானும்
      இழந்தடையச் சிறுச்சுடர்விட் டெறித்துப் போந்தே.

(356)
   

624.

மாசகலுந் தண்கருணை வாரி யாகி
      மற்றுவமை யற்றதனி வளரொளியாய் நிறைந்த
பேசரிய தற்பதத்தே யினிப்பிறிதற் றினிதிற்
      பிறங்குகவென் றிடுக்கணது பெயர்த்திட் டாங்கே.

(357)
  

625.

ஆற்றலினான் மாமாயா விசயந் தன்னில்
      அங்கமுத லோரேழு மறுவின்கா ரணமும்
மாற்றுவகண் டானந்த பூரணமாஞ் சச்சின்
      மயமேதன் வடிவாகி வந்ததுமற் றன்றே.

(358)
  

626.

உவட்டாத புத்தமுத வாரி யாகி
      உணர்வாகி யைங்கோச வுணர்வு மாறித்
தெவிட்டாத தீம்பாகின் சேர்வை யாகித்
      திசைமாறித் தெளிகவெனத் தெளித்த போழ்தே.

(359)
 

வேறு

 

627.

எண்ணுமெம்பி ரானைவந் தெதிர்ந்துளா னிறாவகை
மண்ணும்விண்ணு மெய்துறாது மருவினானவ் வொளியொடே.

(360)

623. “கலுழ்ச்சிகளிப் பகத்தெளிவுட் கலக்கமிகுத திகத்தே, செலுத் தல்திரித் தலற்றடையச் சிவச்சுடர்விட் டெறித்தே” அஞ்ஞ.

625. “காயாதிக ளேழு மாயாவிட யத்தே கையற்றறி வின்கா ரண மாதிகளேழும், மாயாவிட யத்தே மாயச்சுக சற்சின் மயபூரண மேதன் வடிவானது வந்தே” அஞ்ஞ.

626. “கோதற் றமிர்தாகிக் கூறற் றுணர்வாகிக் கூறற் கரிதாகிக் கோசப் புலன்மாறித், தீதற் றவர்காணத் தேனொத் தினிதாகித் தேசத் திசைமாறித் தேறித் தெளிவாயே” அஞ்ஞ.