பக்கம் எண் :

8. கூளி கூறியது 93

615.

துன்பமோர் மூவகை தீர்த்தருள்
      சோதி சுகோதய வாரிதி
இன்பமோர் மூவுல கேத்தவே
      ஈந்தருள் வண்ண மிசைப்பதோ.

(348)
  

616.

பிறிவரு மேலவர் தஞ்செயல்
      பிறரறி வாலறி வோமென
அறியும தன்றஃ தறிவதும்
      அற்று முடிந்த திசையிலே.

(349)
 

வேறு

617.

எந்தைபிரான் றிருக்கடைக்கண் சாத்தி மாய
      இருட்டறுத்து ஞானவிளக் கேற்றுங் காலை
அந்தமிலா வறிஞரென்று மறியா ரென்றும்
      ஆய்வதுண்டோ சுதந்தரம தடைவ ரன்றே.

(350)
   

618.

தண்ணருள்சேர் குரவர்பத கமலஞ் சூடத்
      தவமுடைய தகவுடையான் றனைவி டாது
நண்ணிவரு சிமிழ்ப்பெவையு மாற்றி மாற்றான்
      நலம்பெற்ற திறமினிநா நவிற்று மன்றே.

(351)
   

619.

விருப்பு வெறுப் பவையிரண்டும் விட்டு வீடா
      வினையூச லாடுமகத் தெழுந்த சோகப்
பரப்புமறுத் தெவற்றினையுந் திரிய நோக்கிப்
      பகைநொதும னட்பெவையும் பரிந்திட் டாங்கே.

(352)
   

620.

நோக்கரிய விடத்ததனை நோக்குந் தன்மை
      நோன்மையரைத் தொடுத்தெவர்க்கு நுவலொ ணாத
நீக்கரிய விருட்டதனைக் கதுவ நோக்கி
      நினைப்பரிய கரியிட்டு நீக்கி யன்றே.

(353)

616. “பெரியவர் தஞ்செய லாவதும் பிறரறி வாலறி வோமெனத், தெரியும தன்றது தெரிவதுஞ் செய்து முடிந்திடு திசையிலே” அஞ்ஞவதைப்.

617. “செறிதரும்பிறவி முறியவந்திறைவர் திருவிளங்குகழ லருளுநாள், அறிஞரென்றுமில ரவலரென்றுமில ரவர்சுதந்தரம தடையவே” அஞ்ஞவதைப்.

618. சிமிழ்ப்பு - கட்டு.

620. கரி - சாட்சி.