பக்கம் எண் :

92 பாசவதைப் பரணி

606.

சிவஞான தேசிகன்பொற் றிருவடித்தா மரைவணங்கா
தவஞான தேசிகனென் றவமதியா தயர்த்தனையோ.

(339)
   

607.

பவக்குறும்பு தனையெறியும் பரம்பரனென் றறிந்திலையோ
அவக்குறும்பு தனைமேவி யடிக்கமல மயர்த்தனையோ.

(340)
   

608.

முப்பொழுது முன்னானோன் முன்னேநின் றனையாகில்
இப்பொழுதே நினைந்தாவி யிழந்தனையே யிழந்தனையே.

(341)
 

அஞ்ஞன் கூற்று

 

வேறு

 

609.

துய்ய நாயனார் தொண்டர் சொலுந்தொறும்
வெய்ய பாசனு மிக்கெதிர் சீறியே.

(342)
  

610.

ஏவு ஞான விறைவ ரெனதெதிர்
மேவு போழ்தினிற் காண்டிரென் வீரமே.

(343)
 

அஞ்ஞன் ஞானரூபியாதல்

611.

என்னச் சொன்னசொ லெங்கோன் றிருச்செவி
துன்ன வின்னகை செய்து துனைவனே.

(344)
   

612.

வான நாடு மகிதல முந்தொழும்
ஞான வாற்ற னலத்தினைக் காட்டுவான்.

(345)
 

வேறு

 

613.

ஆடியும் பாடியுந் தேவரும்
      அருமறை தாமுமின் றளவுமே
தேடியுங் காணருஞ் சேவடி
      தீயவன் சென்னி சிறப்பவே.

(346)
   

614.

இம்பர் மனிதர்க் கெளியவோ
      இருந்தவர் நான்முக னாதியாம்
உம்ப ருறாவடி யறிவிலான்
      உச்சியின் மீது முதைத்தனன்.

(347)

606. அயர்த்தனையோ - மறந்தனையோ.

611. பி - ம். ‘செய்து துணைவனே’

614. “வெருவரு நான்முக னாதியாம் விண்ணவர் மண்ணவர் வேறுளோர், ஒருவர் பெறாவடி யுணர்விலா னுச்சியின் மீது முதைத்ததே” அஞ்ஞவதைப்.