| ஞானவினோதன் படைவீரர் கூறல் | | | வேறு | | 599. | கதிரெழ நிற்பது திமிரமோ வெங்கனல் கதுவுழி நிற்பது தூலமோ கலுழனுற் றெதிரெழ நிற்பது நாகமோ மெய்யுணர் வெய்துழி நிற்பது தொல்வினை யேகொலோ. | (332) | | ஞானவினோதன் படைவீரர் அவனை வினாவுதல் | | | வேறு | | 600. | மாயுமிக் காயமும் வீயுமுன் னிளமையும் மன்னிய கிளைஞருந் துன்னிய போகமும் சாயுமிச் செல்வமொன் றாகநீ யெண்ணியோ தம்பிரா னடிதனைச் சார்வுறா தகல்வதே. | (333) | | வேறு | 601. | தானவரென் றிருந்தனையோ தபோதனரென் றிகழ்ந்தனையோ வானவரென் றிருந்தனையோ மறைமுதலென் றறிந்திலையோ. | (334) | | | | 602. | வையமதில் வந்தவொரு மானிடனென் றிருந்தனையோ உய்யுநெறி யெழுந்தருளு மொருமுதலென் றுணர்ந்திலையோ. | (335) | | | | 603. | இடராழி யெடுத்தருளு மேந்தலென வெண்ணிலையோ சுடராழி செலுத்துமொரு தோன்றலெனத் துணிந்திலையோ. | (336) | | | | 604. | புறத்திமிர மிரித்தொளிரும் புன்கதிரென் றிருந்தனையோ மறத்திமிர மிரித்தொளிரும் வளர்கதிரென் றறிந்திலையோ. | (337) | | | | 605. | பிறப்பினையு மிறப்பினையும் பெற்றவனென் றுற்றனையோ இறப்பினையும் பிறப்பினையு மெறிந்தவனென் றறிந்திலையோ. | (338) |
599. திமிரம் - இருள். “இருடுணிந் திரவிமுன் னிற்குமோ பஞ்சுதா னெரியின்முன் னிற்குமோ வெங்ஙனே யரவமுங், கருடன்முன் னிற்குமோ ஞானமே வந்துறுங் கண்ணின்முன் னிற்குமோ வெண்ணுறுங் கன்மமே” அஞ்ஞ. 600. “அழியுமிக் காயமுங் கழியுமுன் னிளமையும் அன்புறுங் கிளைஞரு மின்புறும் போகமும், ஒழியுமிச் செல்வமொன் றாகநீ யுன்னியோ உடையநா யகனைநெஞ் சுணர்வுறா தொழிவதே” அஞ்ஞ. 602. “இந்தவுல கத்தினிடர் கெடும்பரிசிங் கெழுந்தருளி, வந்தவனென் றறிந்திலையோ மானிடனென் றறிந்தனையோ” அஞ்ஞ. 603. இடராழி - துன்பக்கடல். |