பக்கம் எண் :

90 பாசவதைப் பரணி

593.

ஆர்தரு சோக மகிழ்ச்சியும்
      ஆற்றிட மோகனை யுற்றுவாழ்
சீர்விவ கார பராமுகன்
      சீறினன் மயலு மழுங்கவே.

(326)
   

594.

கூர்தரு மாங்கரிப் பாவியைக்
      குலைகுலை யும்படி கூடியே
ஏர்தரு சாந்த னழித்தனன்
      யானென தென்ப திறப்பவே.

(327)
   

595.

அன்னையை யொப்ப வுயிர்த்தொகைக்
      கன்புசெ யும்மவி ரோதனால்
மன்னிய வன்மை மடிந்துக
      மாய்ந்தது மாற்சரன் வாகையே.

(328)
  

596.

ஞானப் பெரும்படை காண்டலும்
      ஞாட்பிடை யேனைய பாசனார்
ஊனப் பெரும்படை யோடின
      ஒன்றொழி யாம லுடைந்தரோ.

(329)
 

ஞானவினோதன் படைவீரர் அஞ்ஞனிடங் கூறல்

 

வேறு

597.

தன்னையங் கொழிய வெல்லாஞ்
      சமர்க்களத் திழந்து தோற்ற
மன்னையங் கொழிவி லானை
      வணங்கென வகுத்த போதே.

(330)
 

அஞ்ஞன் விடை கூறல்

598.

நந்துறா தஞ்ஞ னென்னும்
      நாமமொன் றிருக்க ஞானம்
உந்துறா தெனது சேனை
      உடன்றெழு மென்ன லோடும்.

(331)

593. 587 - 23- ஆம் தாழிசைகளைப் பார்க்க.

594. ஆங்கரி - அகங்காரன்; “ஆங்கரிப் பரிய சாந்தியினழிந்தது” (அஞ்ஞ. ) 525 - 34 - ஆம் தாழிசைகளைப் பார்க்க.

595. 535 - 40 - ஆம் தாழிசைகளைப் பார்க்க. “உயிர்கட் கன்னை போலுமவி ரோதமெழ வாருயிரையும், தீங்கரு த்தியிடு மச்ச ரனழிந்தயரவே” அஞ்ஞ.

596. ஞாட்பு - போர்க்களம்.