588. | மண்டிவரு மகவருடத் தும்பால் கொங்கை மணாளன்வரு டக்காமம் வருமா போல உண்டிமுதற் றொழிலொ த்து மந்த ரங்கத் துயர்ந்தோரு மிழிந்தோரு மொவ்வா ரொவ்வார். | (321) | | | | 589. | அருட்படையு மருட்படையும் பகுத்து நோக்க அறிவுறுத்தி யறிவுடையோ னறிவொன் றில்லா மருட்படையை யடுகெனத்தன் படையை யேவ மாயவஞ்ஞன் படைமாய்ந்த வண்ணங் கேண்மின். | (322) | | ஞானவினோதன் படைவீரர் அஞ்ஞன் படையை அழித்தல் | | | வேறு | | 590. | போர்புரி மதன்னை நிருபகன் பொருதடல் புரிதலும்விருதுடன் வார்பொரு வனமுலை மடநலார் வஞ்சமு மாலு மடிந்தவே. | (323) | | | | 591. | வெவ்விய கோபனை மறனொடு மேவிய வின்சொல் விளைத்தெழு செவ்விய பொறைய னழித்தனன் சீறிய கொலைநலை சிந்தவே. | (324) | | | | 592. | கெடாதுறு கின்றசந் தோடனும் கேள்வி யெனுஞ்சுடர் வாளினால் விடா துறு கின்றவு லோபனை வீட்டின் னாசையும் வீய்ந்ததே. | (325) | 588. "மக்களே போல்வர் கயவ ரவரன்ன, ஒப்பாரி யாங்கண்ட தில்" (குறள்); 'மகவருடப் பால்பயக்குங் கொங்கை யின்ப மயக்கமுயக் குறுங் கணவன் வருடும் போது, மிகவுணர்ந்தோர்க் கும்பிறர்க்குஞ் செயல்கள் பார்க்கின் வேறறினும் பாவகந்தான் வேறு வேறு" அஞ்ஞ. 590. நிருபகன் மதன்னை அழிக்கம் ஆற்றலுடையவனென்பதை 475-ஆம தாழிசை முதலியவற்றாலறியலாகும். "உருபக மகளிர்திறத்தினை மறமொ டிழிப்பொடு, நிருபகன் மதனை யழித்தன னிலவிய ரதியு மிறப்பவே" அஞ்ஞ. 591. கோபனை மறனொடும் அழித்தனன் என்க. கோபனை அடக்கும் ஆற்றல் பொறையனுக்குண்மை 500 - 505 - ஆந் தாழிசைகளாற் புலப்படும். 'பாவனு மிகலு மிரங்கலில் பாடுறு கொலையு மெரிந்தெழு, கோவனு மடைய நலம்பல கூறிய பொறையி னழிந்ததே" அஞ்ஞ. 592. 507-575 - அத் தாழிசைகளைப் பார்க்க. |