பக்கம் எண் :

88 பாசவதைப் பரணி

582.

இழிகுலநற் குலமீதா லென்றங் கொன்றும்
      எண்ணார்க ளியல்புணர்நதோ ரியல்பி லோரும்
இழிகுலநற் குலமீதா லென்றங் கொன்றும்
      எண்ணார்க ளாயினுந்தா னெண்ணின் வேறால்.

(315)
     

583.

செயிர்த்தவர்பா லருள்வாரு மருளி லாரும்
      சிந்தனைநோந் திறமொத்துந் தெரியி னொவ்வார்
செயிர்த்தவர்பா லருளுடையா ரவர்க்கு நோவார்
      தீதுதுடையார் தமதுடம்பிற் செயிர்க்கு நோவார்.

(316)
     

584.

செயவேண்டுந் தவஞான வொழுக்கத் தோரும்
      தீம்பருஞ்செய் யாமையினாற் சேர்ந்துஞ் சேரார்
செயவேண்டுந் தவமெல்லாஞ் செய்து தீர்ந்தார்
      தீதிலார் தீத்தனாற் றீர்ந்தார் தீயோர்.

(317)
     

585.

கற்றுணரத் தகுங்கல்வி மேலா னோரும்
      கயவரும்விட் டொழிந்தமையா லொத்து மொவ்வார்
கற்றுணரத் தகுங்கல்வி யெல்லா நல்லோர்
      கற்றொழிந்தர் கரிசதனாற் கயவர் நீத்தார்.

(318)
     

586.

கனிந்துகனிந் திருந்திரங்கிச் சோரு மாற்றாற்
      கற்றவரு மற்றவரு மொத்து மொவ்வார்
கனிந்துகனிந் தருணோக்கிற் சோர்வர் கற்றோர்
      காரிகையார் மருணோக்கிற் சோர்வார் கல்லார்.

(319)
     

587.

வேறுபகுத் தொன்றினையுங் காணா வாற்றால்
      மேலோருங் கீழோரு மொத்து மொவ்வார்
வேறுபகுத் தொன்றினையுங் காணார் மேலோர்
      வியாபகத்தாற் கீழோர்தம் வெளிற்றாற் காணார்.

(320)

583. "தம்மை யிகழ்வன தாம்பொறுப்ப தன்றிமற், றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தான் - உம்மை, எரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று, பரிவதூஉஞ் சான்றோர் கடன்" (நாலடி. ); "கற்றவரு மற்றவரு மொருவர் செய்யுங் கடுமையினிற் கலுழும்வகை யொத்து மொவ்வார், செற்றவர்மே லுறுஞ்செயிர்க்கு நோவர் நல்லார் தீயுடன்மே லுறுஞ்செயிர்க்கு நோவர் தீயார் அஞ்ஞ.

585 நல்லோர் கற்றொழிந்தார்: "கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்' திருவா.

586. "உள்ளமழிந் துகுமன்பர்க் கன்றி யோரா வுலகர்திறத் தினு முண்டங் கொல்வார் மாதா, கள்ளவிழிக் கழிந்துகுவா ரறியா ரீசன் கலந்த விழிக் கழிந்துகுவார் கவலை யற்றோர்" அஞ்ஞ.

587. வெளிறு - அறிவின்மை.