574. | குற்றமிது குணமிதெனக் குறியார்கள் குறியுடையார் குறியி லாரும் குற்றமிது குணமிதெனக் குறியார்க ளாயினுந்தான் குறிப்பின் வேறால். | (307) |
| | |
575. | அறம்பாவ மவையிரண்டு மறியார்க ளறிவுடையார் அறிவி லாரும் அறம்பாவ மவையிரண்டு மறியார்க ளாயினுந்தான் அறியின் வேறால். | (308) |
| | |
576. | வெறுப்பதிது விழைவதிது வெனத்தெரியார் மேலானோர் மேலல் லாரும் வெறுப்பதிது விழைவதிது வெனத்தெரியா ராயினுந்தான் வேறு வேறால். | (309) |
| |
577. | விலக்கீது விதியீது வெனத்தெளியார் மேலானோர் மெய்யி லாரும் விலக்கீது விதியீது வெனத்தெளியா ராயினுந்தான் வேறு வேறால். | (310) |
| வேறு |
578. | பகைநட்பு நொதுமலிது வென்றங் கொன்றும் பாரார்கள் பயன்றெரிவார் பயனி லாரும் பகைநட்பு நொதுமலிது வென்றங் கொன்றும் பாரார்க ளாயினுந்தான் பார்க்கின் வேறால். | (311) |
| |
579. | தேசமிது காலமிது வென்றங் கொன்றும் தேரார்க டேர்ந்துள்ளார் தேர்வி லாரும் தேசமிது காலமிது வென்றங் கொன்றும் தேரார்க ளாயினுந்தான் றேரின் வேறால். | (312) |
| |
580. | ஆக்கமிஃ தழிவதிது வென்றங் கொன்றும் ஆயார்க ளாய்ந்துளோ ராய்வி லாரும் ஆக்கமிஃ தழிவதிது வென்றங் கொன்றும் ஆயார்க ளாயினுந்தா னாயின் வேறால். | (313) |
| |
581. | மேன்மையிது கீழ்மையிது வென்றங் கொன்றும் வினவார்கள் விளைவுணர்ந்தோர் விளைவி லாரும் மேன்மையிது கீழ்மையிது வென்றங் கொன்றும் வினவார்க ளாயினுந்தான் வினவின் வேறால். | (314) |
581. பி - ம். ‘வினையுணர்ந்தோர் வினையிலாரும்’