| ஞானவினோதன் போர்புரியக் கட்டளையிடல் | |
| வேறு | |
569. | தீக்கு நின்றவம ரஞ்சி யோடுவது செய்க லாததிறல் வீரரை மாய்க்கு கென்றருள வீரர்வீரனை வணங்கி மற்றிது வகுப்பரால். | (302) |
| | ஞானவினோதன் படைவீரர் அவனை வினாவுதல் | |
| | வேறு | |
570. | பாச ராசனார் படையு நம்பெரும் படையும் வேறறி பரிசு பான்மையிற் பேசு வீரெனா வறிவு றுந்திறம் பெரிய வன்பினிற் பேசு வானரோ. | (303) |
| | ஞானவினோதன் தன்படைக்கும் அஞ்ஞன் படைக்கும் உள்ள வேற்றுமை கூறல் |
571. | மாதர் பூண்முலை மருவி வாழிலென் மன்னு மெய்த்தவ வடிவு பூணிலென் கோதில் வாய்மையைக் கண்ட தூயவர் கொண்ட கொள்கையே கொள்கை யாகுமால். | (304). |
| | | |
572. | தேறு மோனமா ஞான போதனார் செய்த செய்கையே செய்யு மாதவம் கூறும் வாசகம் யாவு மந்திரம் கொண்ட கோலமே கோல மாகுமால். | (305) |
| | வேறு | |
573. | நன்றிதுதீ திதுவென்று ணாடார்க ணவையிலோர் நவையு ளாரும் நன்றிதுதீ திதுவென்று ணாடார் ளாயினுந்தான் நாடின் வேறால். | (306) |
570. பி - ம். ‘பெய்யு மன்பினில்’
571. “விண்டிருந்தென்மெய் கண்டுளோர்தவ வேடமேவியென் கோடி மாதரைக், கொண்டிருந்தெனவர் செய்ததேதவங் கொண்டகொண்டதே கோல மாகுமால்” அஞ்ஞ.
573. தான் : அசைநிலை