பக்கம் எண் :

8. கூளி கூறியது 85

563.

மாறுகெட வாகையுட னென்னையட வந்தவனை
      வந்தெதிர் கலந்தவுடனான்
வீறுகெட மீளினெனை யஞ்ஞபதி யென்றழையல்
      வேறுபெய ரிட்டழையுமே.

(296)
   

564.

இன்னவகை கூறிமத னாதிபடை யத்தனையும்
      ஏவியிறை வன்படையுடன்
அன்னவகை போர்புரிக வென்னவறி வன்படையொ
      டஞ்ஞபதி படைபொருததே.

(297)
 

அஞ்ஞன்படை அஞ்சுதல்

 
 

வேறு

 

565.

கடாவிடை யாகிய தேர்வகை காண்டலும்
கடாவிடை யாகிய தேர்வகை கண்டில.

(298)
  

566.

புலனெனப் பெயரிய போதகந் தோன்றலும்
புலனெனப் பெயரிய போதகந் தோன்றில.

(299)
  

567.

கதிசேர் கரணக் கடும்பரி பாய்தலும்
கதிசேர் கரணக் கடும்பரி பாய்ந்தில.

(300)
 

வேறு

568.

அஞ்சாம லறிவன் படைத்தானை காண
      அஞ்ஞன் படைத்தானை யணியாக வெழுமே
எஞ்சாம லீராறு ரவியும் புகுந்தால்
      இரியாம லிருண்முற்று மெதிர்நிற்கு மன்றே.

(301)

563. “ஆண்டகைய னாகினெனை யஞ்சுத லொழித்துவரு மவனை யெதிர் கண்டளவில்யான், மீண்டிடுவ னாகினெனை யஞ்ஞவர சென்றழையல் வேறுபெய ரிட்டழையுமே” அஞ்ஞ.

565. கடாவிடையாகிய தேர்வகை - கடாவும் விடையுமாகிய விசார வகைகள், கடாவுகின்ற நடுவிலுள்ளனனவாகிய தேர்களின் வகைகள்.

566. புலன் - அறிவு, தன்மாத்திரை. போதகம் - ஞானம், யானை.

567. கதி - நற்கதி, நடை. கரணம் - யோககரணங்கள், ஆடல் வகை.

568. “அறிவின் பெருஞ்சேனை கண்காண வெதிரே அஞ்ஞன் கொடுஞ்சேனை யஞ்சாம லெழவோ, எறிவெங் கதிர்ச்செல்வ ரெத்திக்கு மெழவே இரியாம லிருணிற்கி னிதுநிற்கு மெதிரே” அஞ்ஞ.