556. | மொழிவ தென்கொல்பவ முழுதுமிது பொழுதுகெடுவீர் முடிய வந்தடர்தல் காணுமினி யென்றுமொழிவார் அழிவ தென்கொலினி யஞ்ஞனுடை நாமமறவே அழியு மென்றயர்வர் தங்களி னடங்கவிவையே. | (289) | | | வீரர் அஞ்ஞனுக்கு அறிவித்தல் | | | | வேறு | | 557. | தீமையுற்ற தானையஞ்ஞ தீரனுக்கு வீரர்போய் வாய்மையுற்ற ஞானசேனை வந்ததென்று கூறவே. | (290) | | | | 558. | முன்னைவெல்ல வந்தசேனை மூவர்சேனை யாதலால் என்னைவெல்ல வந்தசேனை யாவர்சேனை யென்னவே. | (291) | | | | | 559. | உம்பரும்ப ரீசனென்ன வூதுசின்ன வோசையே இம்பரெங்கு மானதே யாமறிந்த தென்னவே. | (292) | | | அஞ்ஞன் கூற்று | | | | வேறு | | 560. | செப்பரிய காமன்முதல் வீரரமர் வென்றடுவர் தேகமுள னாகிலவனை ஒப்பரிய சோதியெனி னென்கணெதிர் நிற்பதிலை ஒல்வதல வெல்வதுவுமே. | (293) | | | | | 561. | உடைந்தவர்க ளன்றியெவர் மண்ணவரில் விண்ணவரில் உற்றமறை செற்றபடியே அடைந்தவர்கள் மாரன்முத லானபடை வீரரை அடர்ந்துசெரு வென்றவர்களே. | (294) | | | | | 562. | அங்கமதி லிந்திரிய மனதினொடு புந்தியுயிர் ஆங்கார மிங்கிவைகளின் சங்கமெனு மேழணியி லொன்றுவிடு விப்பினும் தானையொரு தலைவனிவனே. | (295) |
558. “மூவர்சேனை யென்கண்முன்பு நிற்கவில்லை மொய்ம்பினோ, டியாவர்சேனை யென்னைவெல்ல விங்குவந்த தென்னவே” அஞ்ஞ. 559. “யாவர்சேனை யென்னயா மறிந்ததில்லை யெங்கணும், தேவதேவ தேவனென்ற சின்னவோசை யென்னவே” அஞ்ஞ. 560. “ஏகமுத லோனருவ னாகினமர் செய்யவவ னென்கணெதிர் நிற்கவலனே, தேகமுள னேலவனை மாரன்முதல் வீரர்படை சிந்துவர்கள் சிந்திவிடவே” அஞ்ஞ. பி - ம். ‘வெல்வதவமே’ 562. “ஓதுமுத லிந்திரிய முள்ளுமனம் புந்தியுயி ரோங்கியவ கங் கரமுமிங், கியாதுமுள சங்கமெனு மேழணியி லொன்றுவிடு விக்கினவ னிங் கிறைவனே” அஞ்ஞ. |