பக்கம் எண் :

8. கூளி கூறியது 83

 

வேறு

 

549.

அகம்புகுந் தடங்கவே யடங்கலும் மவதியே
சகம்புகுந்த வென்றுகண்டு தம்முளே யடங்கவே.

(282)
   

550.

எங்குமாய் நிறைந்துநின்ற விறைவனேயொர் வடிவெடுத்
திங்குமேவு கின்றன னென்றுசொல்லு மெல்லையே.

(283)
 

அஞ்ஞன் படைவீரர் கூற்று

 

551.

ஏகதேசி யாகவே யெங்குமாய் நிறைந்தவர்
போகவந்த வேதுவேது புகல்கவென்பர் சிலர்களே.

(284)
  

552.

அருவமென்ற வீசனா ரகன்புவிக்க ணெய்தவந்
துருவமெய்து மாறுநன்று நன்றெனா வுரைப்பரே.

(285)
 

வேறு

553.

அறிவி லன்புர மழிந்ததினி யென்றுமொழிவார்
      அமையு நந்துழனி யென்றமைவு வந்துவிடுவார்
செறியு நந்தவ முடிந்ததினி யென்றுதெளிவார்
      தெரிய வுஞ்சமய மொன்றுமிலை யென்று திரிவார்.

(286)
  

554.

ஒன்றி யெங்குமுற நின்றபொரு ளின்றுபடிமேல்
      உருவெ டுத்துவரு கின்றதென வுற்றுமொழிவார்
வென்றி கொண்டணைய விங்குவரு கின்றவிரகோ
      மிகவு நன்றென வியந்துநகை கொண்டுதொழுவார்.

(287)
  

555.

குலம டங்கலு முடிந்தது முடிந்ததெனவே
      குடிகெ டும்படி புகுந்ததறி வென்று குலைவார்
சொலமு டிந்திறுவ தொன்றென மொழிந்தகணியார்
      சொலவு மின்றுதலை வந்ததென நின்றுசுழல்வார்.

(288)

551. பி - ம். ‘போகம் வந்த’

553. துழனி - ஆரவாரம். “சமய மென்பனவு மொன்றுமில தென்று மொழிவார் தவமுடிந்தது முடிந்ததென நின்றுசமைவார், அமையு நந்துழனி யென்றமைவு வந்துவிடுவார் அறிவி லன்புர மழிந்ததினி யென்றயருவார்” அஞ்ஞ.

554. விரகு - தந்திரம். “மருவி யெங்குமுற நின்றபொரு ளின்றுபுவி மேல் வடிவு கொண்டுவரு கின்றதென நின்றுமொழிவார், அருவ மென்று மொழி கின்றபொரு ளிங்குவருதற் கடிமை யென்றுசிலர் நின்றுநகை கொண்டுவிடுவார். “ அஞ்ஞ.

555. “குடிகெ டும்படி புகுந்ததுணர் வென்றுதளர்வார் குலம டங்கலு முடிந்ததென நின்றுகுலைவார், முடிவில் வந்துறுவ தொன்றென மொழிந்தகணியார் மொழியு மின்றுதலை வந்ததென நின்றுகுலைவார்” அஞ்ஞ.