பக்கம் எண் :

82 பாசவதைப் பரணி

 

ஞானவினோதன் போர்க் கேகல்

 

543.

தானை கண்டருளி யின்புறு காலைத்
      தலைவ ணங்கிவிடை கொண்டறி வில்லான்
சேனை யொன்றொழிய வெல்லுது மென்னாத்
      திண்மை யோடுமெதிர் சென்றன னன்றே.

(276)
 

ஞானவினோதன் படையின் செயல்

 
 

வேறு

 

544.

மறைகளே வாசியா வாய்மையே பாகனா
      மன்னு தத்வத்
துறைகளே தேர்களா வேறினர் சூடினார்
      துணைவர் தாளே.

(277)
  

545.

போதகம் போதகம் தேர்வகை தேர்வகை
      புன்மை யுற்ற
சாதகந் தீர்வகை வாசியே வாசியார்
      தம்மை யொப்பார்.

(278)
   

546.

பிறிவிலா னானைதேர் புரவிகா லாளிவை
      பெரிது மெய்தி
அறிவிலா னமருமா யாபுரங் குறுகிநின்
      றார்த்த வன்றே.

(279)
   

547.

வரவொடு போக்கிலா வகையினாற் சூழ்கென
      மாசில் சேனை
விரைவொடு வஞ்சகன் வாழுமா யாபுரம்
      விரவ முற்றும்.

(280)
 

வாயில் காவலர் அறிவித்தல்

 
 

வேறு

 

548.

பெற்றமூரு மவனலன் பிரமனல்லன் மாலலன்
மற்றைமூவர் மூலமே வந்ததென்ன வாயிலோர்.

(281)

543. அறிவில்லான் - அஞ்ஞனது.

544. வாசி - குதிரை. “வித்தக வேதங்க ளேவாசி யாவே மெய்த்திற னேநின்ற வோர்பாக னாவே, தத்துவ மாகின்ற தேரேறி னாரே தற்சொரு பானந்தர் தாள்சூடி னாரே” அஞ்ஞ.

545. போதகம் - ஞானம், யானை. தேர்வகை - விசாரம். தேரினது வகைகள். வாசி - வாசியோகம், குதிரை. தம்மை யார் ஒப்பாரென்க. “வாசியி லாவாசி யேவாசி தானாம், போதமே போதக மாந்தேர்வு தேர்தாம் போல்பவ ரேவீர ரேதோது மாறே” அஞ்ஞ.