| | வேறு | | 535. | சாந்தனடி பணிந்தினைய வாறு கூறத் தம்பிரா னிருசரணந் தலைமேற் கொண்டு போந்தமுத சீலனார் மகிழ்ந்து தாஞ்செய் பொருபோரின் றிறமனைத்தும் புகல்கின் றாரால். | (268) | | | அமுதசீலன் கூற்று | | | | வேறு | | 536. | தன்னுயிர்க்கு நலம்வேண்டு மதுபோலத் தராதலத்து மன்னுயிர்க்கு நலம்வேண்டு மதுவன்றோ வாழ்வாதல். | (269) | | | | | 537. | தன்னாக்கந் தனக்குவகை தலைவருமேற் பிறன்மாட்டு மன்னாக்கந் தனக்குவகை வாராத வகையெவனால். | (270) | | | | 538. | அறிவாக்க முருவாதி யயலார்த மிடைக்காணிற் பிறவாக்கம் வேண்டுவரோ வதுதமதாப் பெட்டுயர்வர். | (271) | | | | 539. | நான்பெற்ற பேறுலகம் பெறுகென்பார் நலனயலார் ஏன்பெற்று வாழ்வரென விகலுமா றெவ்வாறால். | (272) | | | | 540. | எல்லாருந் தமைப்போல்க வென்பார்முன் னிகலேற்றுப் பொல்லாத மாற்சரியன் போர்புரித லெவ்வாறால். | (273) | | | வேறு | 541. | இன்ன தன்மையின வெந்தைபி ரான்முன் எய்தி வம்மர்பல ரெத்தனை கோடி அன்ன தன்மையினி லோதுத லோடும் ஐய னும்மக மகிழ்ந்தன னன்றே. | (274) | | | | 542. | இந்த வண்ணமியன் ஞானவி னோதன் ஏற்ற மிக்கபடை யாவு மிறைஞ்சித் தந்தம் வென்றிதழு வுந்தொழி றம்மிற் றாழ்வி லாதவகை சாற்றுத லோடும். | (275) |
536. “எல்லாரு மின்புற் றிருக்க நினைப்பதுவே, அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே” தாயுமானவர் பாடல். 538. பெட்டு - விரும்பி. 539. “நான் பெற்ற வின்பம் பெறுகவிவ் வையகம்” திருமந்திரம். 540. இகல் ஏற்று - பகையை மேற்கொண்டு. மாற்சரியன் - பொறாமை. “எவ்வுயிரு மென்னுயிர்போ லெண்ணி யிரங்கவுநின், தெய்வ வருட்கருணை செய்யாய் பராபரமே” தாயுமானவர் பாடல். 541. பி - ம். ‘மகிழ்ந்தன னன்றோ’ |