529. | புன்மைக்கே நனிபெரியேன் பொறிவழிபோ யறிவழிந்து புலம்பு கூர்வேன் நன்மைக்கே நனிசிறியே னெனத்தாழ்ந்து மதத்தன்வலி நலிவ னேயால். | (262) | | | | | 530. | நான்பெரியே னென்போன்முன் னான்பெரியே னென்னாது நல்லோய் நீயே தான்பெரிய னான்சிறியே னெனக்குழைந்து மதத்தனொடு தாக்கு வேனால். | (263) | | | | 531. | புழுவிற்குங் குணநான்கே யெனக்குமஃ தென்றாலும் புரியும் பொல்லா வழுவிற்குப் புழுவொவ்வா யான்பெரிய னெனமதத்தன் வலிநில் லாவால். | (264) | | | | | 532. | வணங்குவரி சிலைவாளி தைக்குமெனும் வழக்காலிவ் வையந் தன்னில் வணங்குமஃ தியாவதென வணங்குவதன் றோநன்கு மதிப்பே யாதல். | (265) | | | | | 533. | ஆழ்வதரு மணிமிதப்ப தாழியிடைத் துரும்புதுலை அதனிற் பெய்யத் தாழ்வதுயர் வதுவென்னத் தாழ்வதன்றோ வெனதுபெருந் தலைமை யாதல். | (266) | | | | | 534. | எல்லவர்க்கு மொப்பதன்றே யென்றாலும் பணிவாதல் இருமைத் தாய செல்வருக்கே மேலுமொரு செல்வமெனச் செல்வதன்றோ செல்வ மாதல். | (267) |
529. புலம்பு - வருத்தம். 530. பி - ம். ‘என்போர்முன்’. 531. வழுவிற்கு யான் பெரியன் என்க, “புழுவுக்குங் குணநான் கெனக் கும்மதே, புழுவிற்கிங் கெனக்குள்ள பொல்லாங் கில்லை, புழுவினுங் கடையேன் புனிதன்றமர், குழுவுக் கெவ்விடத்தேன் சென்று கூடவே” தே. 532. வணங்கு - வளையும். 533. ஆழியிடை அருமணி ஆழ்வது; துரும்பு மிதப்பது. “வலி தன்றோ தாழுந் துலைக்கு” நீதிநெறி. 534. “எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளும், செல்வர்க்கே செல்வந் தகைத்து” குறள். |